அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 59
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 59 வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே பொருள் : சிறு பருவத்திலே – விளையாடும் வயதிலே எனை தடுத்தாண்டு திருவடி பெருமை குறித்து…