அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 9

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 9 ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல் வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி  வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர் பொருள் : எண்ணில் சமயங்கள் அதன் மேலும் ஆறு அந்தங்கள் ஆம் சித்தாந்தம் வேதாந்தம் போதாந்தம் நாதாந்தம் கலாந்தம் மற்றும் எல்லா அந்தத்துக்கும் தெய்வம் ஒன்றே – அது சிவம் – சுத்த சிவம்…

” மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி – யார் யார் இப்படி “

” மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி – யார் யார் இப்படி ” ஒரு தாய் தன் புருஷனுக்கும் தான் பெற்ற மகனுக்கும் இடையில் மத்தளம் திருமணம் ஆன ஒரு பெண் தன் புகுந்த வீட்டுக்கும் தான் பிறந்த வீட்டுக்கும் இடையில் மத்தளம் தான் ஒரு நல்ல குடும்பஸ்தன் தன் மனைவிக்கும் தன் தாய்க்கும் இடையில் மத்தளம் ஒரு உற்பத்தி பிரிவு பொறியாளர் தொழிலாளர்க்கும் நிர்வாகத்துக்கும் இடையில் மத்தளம் வெங்கடேஷ்

” சாதகனும் பரமபத விளையாட்டும் “

” சாதகனும் பரமபத விளையாட்டும் ” சாதகன் தன் சாதனத்தில் பரமபத விளையாட்டு – ஏணி – பாம்பு – விளையாடுதல் மாதிரி மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ” ஏணியில் ஏறியபடியே இருக்க வேண்டுமே அல்லாது பாம்பால் தீண்டப்படாமல் பாத்துக்கொள்ள வேண்டும் ” பாம்பு = மண் – பொன் – பெண் ஆசைகள் இது தான் மிகப்பெரிய பாம்புகள் ஆம் இவைகள் கடந்து தான் பரமபதம் அடைய வேண்டும் சாதனத்தில் அந்த இடம் தான்…

ஞானிகள் உலகமயமானவர்கள்

ஞானிகள் உலகமயமானவர்கள் பட்டினத்தார் : செல்வந்தரை பின் சென்று சங்கடம் பேசி தினம் தினம் பல்லினைக்காட்டி பரிதவியாமல் பரமானந்தத்தின் எல்லையில் புக்கு நல் எனக்காம் இடத்தே அல்லலற்று என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே இதையே மேலை நாட்டு ஞானிகள் : I literally love being at home . In my OWN Space – Comfortable But not surrounded by People ஞானிகள் கருத்து வேறுபடவே மாட்டார்கள் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 8

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 8 சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும் அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத் தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்  அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின் பொருள் : பலப்பல சமயங்களும் அதன் எண்ணிலா தெய்வங்களும் தேவதைகளும் எல்லாம் சுத்த சிவ சன்மார்க்கம் எனும் ஞான சன்மார்க்கத்திலும் அங்கு விளங்கும் ஆடல் செயும் திருவடியில் அமையும் அடங்கும் என்றறிவீரகள் உலகீர் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 7

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 7 வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும் ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும் ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்  ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே பொருள் : விண்ணிலுள்ள தேவர்க்கும் காணரிதாம் சிற்றம்பல நாட்டியம் – அந்த ஞான நாடகம் தான் நாம் பெறல் வேண்டுமே அல்லாது இந்த ஊனக் கண் கொண்டு பார்க்கும் காணும் உலக நாடகம் அல்ல…

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 6

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 6 ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர் மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்  யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன். பொருள் : வேதத்தின் அந்தமும் ஆகமத்தின் அந்தமும் கூறும் சிற்றம்பல வெளி நடம் போற்றுவீர் அடைவீர் உலகீர் – உலகத்துக்கு நன்மை உண்டாகவே – வழி காட்டவே இதை நான் யோக மாந்தர்க்கு செப்பினேன்…