சன்மார்க்கத்தாரின் வகைகள்

சன்மார்க்கத்தாரின் வகைகள் பக்குவப்பட்டவர் எனில் அபெஜோதி ஒருவர் தான் அதனால் சமய மத தெய்வங்கள் எல்லாம் அபெஜோதியின் அம்சம் பிரதிபலிப்பு என்பார் பேதம் காணார் ஒருமை காண்பார் சாதனமும் பயில்வார் ஜீவகாருண்ணியத்தோடு சேர்த்து பக்குவம் இல்லாதார் சமய மத தெய்வங்களைப் பழிப்பார் நிந்தை செய்வார் வித்யாசம் பேதம் பார்ப்பார் ஒருமையில் நில்லார் ஒரு சாதனமும் பயிலார் வெங்கடேஷ்

” நகைச்சுவையும் வேடிக்கையும் “

” நகைச்சுவையும் வேடிக்கையும் ” ஒரு அரசியல்வாதி ” ஊழல் – வறுமை ஒழித்துவிடுவேன் ” என்பது எப்படி நகைச்சுவையும் வேடிக்கையோ ?? அப்படித்தான் ஆன்மீக குருக்கள் – மன்றங்கள் குண்டலினி மேலேற்றுவேன் கீழிறக்குவேன் என்பதும் நகைச்சுவையும் வேடிக்கையும் ஆகும் ரெண்டும் நடக்காத ஒன்று வெங்கடேஷ்

தெளிவு 409

தெளிவு 409 ” பஞ்சணையும் – அரவணையும் ” ரெண்டும் ஒன்று தான் முதலாவது நாம் தூங்குவது இதன் மேல் ரெண்டாவது ரங்கன் உறங்குவது இதன் மேல் பஞ்சணை = 5 இந்திரிய சக்திகளும் கூடுவதால் – இந்த பேர் அரவணை = பாம்பை படுக்கையாக வைத்திருத்தல் பைன்னாக தலை பாய்ந்தவன் = 5 தலை நாகம் படுக்கை கொண்டவன் ரங்கனாகிய ஆன்மா பைன்னாகம் = 5 இந்திரிய சக்திகள் ரெண்டிலும் 5 இந்திரிய சக்திகள் தான்…

” ஆருத்ரா தரிசனம் – சன்மார்க்க விளக்கம் “

” ஆருத்ரா தரிசனம் – சன்மார்க்க விளக்கம் ” ஆருத்ரன் = ஆ + ருத்ரன் ஆ = பசு புறத்தில் அகத்தில் = ஆன்மா உயிர் ருத்ரன் = சுத்த சிவம் ஆக ஆன்மாவினுள் – உயிரினுள் சுத்த சிவத்தின் திரு நடனம் அருள் நடம் காணுதல் தான் ஆருத்ரா த்ரிசனம் ஆம் இதை தான் பசு மேல் சிவம் சத்தியுடன் அமர்ந்திருப்பதாக புறக்காட்சி அமைத்திருக்கின்றார் ஞானத்தை சடங்காக மாத்திவிட்டார் நம் முன்னோர் – பின்…

தெளிவு 408 

தெளிவு 408 மந்திரத்தால் மாங்காய் விழாது அது போலத்தான் சடங்கால் ஞானம் – ஆன்மா -இறை அடையமுடியாது இதில் ஜீவகாருண்யம் எனும் அன்னமிடுதலும் அடங்கும் வெங்கடேஷ்