அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 64
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 64 உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான் எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : உணவை வெறுத்து உடல் வற்றிப்போய் , தவத்தால் புற்று மூடி தவம் ஆங்காங்கே…