” ஞானியும் சாமானியனும் “

” ஞானியும் சாமானியனும் ” சாமானியன் தனக்கு வேண்டியது வீடு வாசல் கார் பங்களா எஸ்டேட்  தோட்டம் துரவு என் பட்டியல் நீளும் ” இது வேண்டும் அது வேண்டும் ” என்பான் இவனுக்கு தெரிந்தது எல்லாம் ” வேண்டும் ” தான் ஞானியோ ” உன் அருள் ஒன்றே போதும் ” என்பான் வேண்டும் – போதும் இருவரும் எதிர் தானே ?? வெங்கடேஷ்

சிற்றின்பமும் பேரின்பமும் 5

சிற்றின்பமும் பேரின்பமும் 5 விந்து நாதத்துடன் கலந்தால் அது சிற்றின்பம் இது உடல் ரீதி இன்பம்  இரு உடல் சம்பந்தப்பட்டது இது புறமும் ஆம் இதே பரவிந்து பரநாதத்துடன் கலந்தால் அது பேரின்பம் ஆம் இது சாதகன் தனக்குள்ளே ஆற்றுவது ஆம் இது அகம் வெங்கடேஷ்

கானல் நீர்

கானல் நீர் ஒரு கணவன் காசியில் இருந்தும் அவன் மனைவி  ராமேஸ்வரத்தில் இருநதும் தங்களுக்கு பிள்ளை வரம் கேட்டனர் இறைவன் சிரித்துக் கொண்டான் ஒரு சன்மார்க்க சங்கம் சேர்ந்தவன் சமையல் கட்டில் இருந்தபடி தனக்கு மரணமிலாப்பெருவாழ்வு – முத்தேக சித்தி வரம் கேட்டான் அப்போதும் இறைவன் சிரித்துக் கொண்டான் வெங்கடேஷ்

மனம் எத்தகையது ??

மனம் எத்தகையது ?? ” ஒரு கண்ணில் வெண்ணெய் – மறு கண்ணில் சுண்ணாம்பு ” எப்படி ? மனம் தனக்கு பிடித்தவைகள் செயும் போது நேரம் நீட்டிக்கொண்டே போகும் சினிமா – தொலைக்காட்சி – மொபைல் – வலை – இதில் எந்த கட்டுப்பாடும் வைக்காது ஆசையால் இவ்வாறு செயுது இது வெண்ணெய் போல் ஆம் இதே சாதனம் செயும் போது – 2 மணி எனில் அதை , 2 மணி விட ஒரு…

 ” உலகின் சிறந்த போராட்டம் “

” உலகின் சிறந்த போராட்டம் ” ஸ்டெர்லைட் எதிரானது அல்ல சாதி மத எதிர்ப்பது அல்ல சம்பளம் உயர்வு கோரி நடப்பதல்ல இது மனதுக்கும் நமக்கும் நடப்பது தான் மனதின் ஆசைக்கும் நம் யதார்த்துக்கும் நடப்பது தான் என்ன சரி தானே?? வெங்கடேஷ்

சிரிப்பு 293

சிரிப்பு 293 ஒருவர் என்னிடம் அலைபேசியில் என் பதிவுகளைப்படித்து விட்டு – பேர் கூட சொல்லவிலை அவர் : என்ன நீங்க பாட்டுக்கு ” கண் – கண்”னு சொல்லிட்டே போறீங்க – அதனால் மனம் அடங்கும் ? – சித்தி சாத்தியம்னு சொல்றீங்க ?? அது எப்படி முடியும் ?? நான் : ஏன் கண்ணால உங்க பொண்டாட்டி உங்களை அடக்கும் போது அதே கண்ணால மனசை அடக்க முடியாதா ?? எதிர் திசையில் துண்டித்துவிட்டார்…

” ஞானியும் சாமானியனும் “

” ஞானியும் சாமானியனும் ” சாமானியர் வாழ்க்கை நடத்த பெண் வீட்டாரிடம்  சீர் கேட்கிறான் கட்டில் – பீரோ – பண்டம் – பாத்திரம் நகை – பணம் என அடுக்கலாம் ஆனால் ஞானியோ ஒரே ஒரு சீர் மட்டும் கேட்கிறான் அது ” வேகாக்கால் “ஆம் இது இருந்தால் எல்லாம் இ்ருப்பதுக்கு கிடைத்ததுக்கு சமம் வெங்கடேஷ்

தெளிவு 411

தெளிவு 411 எப்படி மொபைிலில் airplane mode ON செய்தால் எல்லா செயலியும் செயலிழந்து OFF விடுதோ ?? அவ்வாறே தான் ஆன்மா விழித்தடைந்துவிட்டால் எல்லா தத்துவமும் செயலிழந்து விடும் OFF ஆகிவிடும் வெங்கடேஷ்