” மனைவி அமைவெதெலாம் இறைவன் கொடுத்த வரம் ”
இந்த வரி எழுதியவர் பெரிய ஞானியாகத்தான் இருக்க வேண்டும்
100 % உண்மை உண்மை
உண்மை சம்பவம்
என் கல்லூரி நண்பனை சென்னையில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தேன்
பல ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பு
அவன் அம்பத்தூரில் வேலை பார்த்ததாகவும் – அங்கு உழைத்து நல்ல பேர் எடுத்ததாகவும் –
அது நட்டத்தில் போய்க்கொண்டிருந்த துறை
அதை தன் திறமையால் கடின உழைப்பால் – லாபத்தில் இயங்க வைத்ததாக கூறினான்
இதனால் அவனுக்கு பதவி உயர்வால் வேறு பெரிய துறைக்கு மாற்றப்பட்டு அங்கும் நல்ல பேர் வாங்கி
இப்போது நைஜீரியா நாட்டில் இருக்கும் அந்த கிளை ஆலைக்கு மாற்றலாகி போய் 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாம்
அங்கு நல்ல சம்பளம் – எல்லாம் வரிவிலக்கு சம்பளம் – பிடித்தம் இல்லை என்றான்
தங்கும் இடம் இலவசம் – ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா வந்து செல்ல இலவசப்பயணம்
அதனால் சேமிப்பு – நல்ல கொழுத்த சேமிப்பு என்றான் பூரிப்புடன்
ஆண்டுக்கு இங்கு வந்து சுமார் 50 லட்சத்துக்கு சொத்து வாங்கி போவதாக கூறினான்
பெங்களூர் – சென்னை – மும்பை – பல இடங்களில் அசையா சொத்து இருப்பதாக கூறினான்
நான் உன் உழைப்பு – திறமை தான் காரணமா – ?? இல்லை வேறு ஏதாவது என்றேன் ??
என் மனைவி என்றானே பார்க்கலாம்
என்ன உன் மனைவியா ??
ஆம் ஆமாம் – அவள் கொடுத்த சித்ரவதையால் நான் வீட்டுக்கு செல்லாமல் கம்பெனியே கதி என்று வேலை செய்ததால் தான் எனக்கு னல்ல பேர் – உழைப்பாளி – அதனால் நட்டத்தில் ஓடுவதை லாபத்துக்கு மாத்த முடிந்தது என்றான்
அதனால் மேல் மேல் முன்னேறிவிட்டேன் என்றான்
எல்லாம் என் வீட்டு மகா லட்சுமி – என் பொண்டாட்டி – ( ரொம்ப அதிகாரம் செய்வார்களாம் – அவர்கள் ராஜ்யம் தானாம் வீட்டில் ) தான் முழு முதல் காரணம் என்றான்
எப்படி ??
கெட்டதிலும் நல்லது உள்ளது – ஒப்புக்கொள்கிறீர்களா ??
வெங்கடேஷ்