அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 68
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 68 நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள் நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம் வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால் தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே. பொருள் : அயன் மால் ருத்திரன் இந்திரர் ஜைனர் – அருகர் புத்தர் உள்ளிட்ட எலா…