” YOU TUBE ” வில் இருக்கும் காணொளிகள் – வீடியோ

 YOU TUBE ” வில் இருக்கும் காணொளிகள் – வீடியோ

என் நண்பர் கூறியதின் பேரில் இதில் இருக்கும் சில வீடியோ பார்த்தேன் – கேட்டேன்

சிரிப்புத் தான் வருது

10 % உண்மை – 90 % பொய் புரட்டு தான் உள்ளது

1 சரியாக இருப்பது

கண் தவம் – கரு விழி தீட்சை பற்றியது சரியாக உள்ளது

ஆனால் இது மட்டும் போதாது – இன்னமும் அனேக செய்தி உள்ளது

அதெல்லாம் இல்லை – இது பாதி கிணறு தாண்டிய மாதிரி

இந்த கண்மணி எப்படி உப்யோகித்து சாதனம் தவம் செய்வது என விரிவாக உள்ளது கூறப்படவில்லை

ஏனெனில் இந்த கண்மணி வைத்து தான் ஞானமே அடைய வேண்டும் –

2 தப்பாக இருப்பது

* குண்டலினி எழுப்புதல் – நெற்றிக்கண் திறத்தல் – கேசரி முத்ரை யோகம் – இதெல்லாம் தப்பாக இருக்கு

சிரிப்பாக வருது
சிறு பிள்ளைத்தனமாக இருக்கு

மன்றம் சொல்வது போல் குண்டலினி – முதுகுத்தண்டின் அடியில் – எழுப்புவது – உடல் பயிற்சி என்பதெல்லாம் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு

” இவர் கூறுவதெல்லாம் அபர வித்தை ஆகும் –
பர வித்தை அல்ல ”

இந்த பயிற்சியினால் எல்லாம் குண்டலினி அசையாது – அங்கிருந்தால் தானே எழுவதுக்கு ??

எல்லா பயிற்சியும் கழுத்துக் கீழ் தான் – இது மாபெரும் தப்பு

பர வித்தை முகத்தில் மட்டும் தான் – முண்டத்தில் இல்லை

* நெற்றிக்கண் திறப்பு என்பது நகைச்சுவை ஆக உள்ளது

இது என்னமோ பெண்களை தெய்வமாக கண்டால் முடிந்துவிடும் போல் என்பது வேடிக்கை நகைச்சுவை தான்

இதுக்கு ஆயிரம் படிகள் உள்ளன – முத்தி – 8/2 போல் கடினமான படிகள் உள்ளன

** வாசி
இது மனம் அமைதியாக இருந்தால் வாசி ஓடும் எங்கிறது – இது தப்பு

இது உண்டாக்குவது மிக மிக சிரமம் ஆகும்

நம் பௌதீக சுவாசத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் உண்டு

இது உண்டாக்குவது மாபெரும் ரகசியம் ஆகவே உள்ளது

வாசி பயிற்சி தப்பாக இருக்கு – கருவிழி உபயோகம் தப்பு

** Bruce LEe – வாசி யோகம் பயின்றார்
அவர் ஞானி சித்தர் யோகி – எல்லாம் தெரிந்தவர் என்பதெல்லாம் ஒப்புக்கொள்ள முடியாது – நகைச்சுவையாக வேடிக்கையாக உள்ளது

அவர் ஹாங்காங்கில் தெருப்பொறுக்கி – பின் ஷாவோலின் சென்று அங்கு வித்தை கராத்தே குன்ஃபூ கற்று – அதில் தேர்ந்து வெற்றி பெற்றாரே தவிர – அவர் ஆன்மீக வாதி என சித்தரிப்பது எப்படி சரியாகும் ??

** கேசரி முத்ரா – இது நாக்கு சம்பந்தப்படுத்துகிறாரே தவிர கண்மணி தொடர்பு படுத்தவிலை என்பது வருத்தத்துக்குரியது

நாக்கு – அபர வித்தை
கண்மணி – பர வித்தை

மொத்தத்தில் YOU TUBE ” வில் இருக்கும் காணொளிகள் – வீடியோ – அனேகமாக எல்லாம் பொய் புளுகு அண்டப்புளுகு அபர வித்தை

சரியான பாதை முறை தெரிவிக்கவிலை – பர வித்தை அறிவிக்க வில்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s