” மலையாண்டியும் மலையப்ப சாமியும் “

” மலையாண்டியும் மலையப்ப சாமியும் ” இருவரும் ஒன்று தான் ரெண்டும் ஆன்மாவைக்குறிக்க வந்தது ஆம் மலையாண்டி = முருகன் மலையப்ப சாமி = திருப்பதி வெங்கடேச பெருமாள் குன்று – மலை மீது இருப்பதெல்லாம் முருகன் தான் அதாவது துரியம் மேல் மலையில் இருப்பது எப்படி ஆன்மாவோ அப்படி தான் புற மலையில் இருப்பதெலாம் முருகன் தான் அதனால் இதுவும் அதுவும் ஒன்று தான் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 80

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 80 சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடைநின் றொலியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே  ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே கூகாஎன் றெனைக்கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவெனக்கே கொடுத்ததனி அமுதே மாகாதல் உடையார்கள் வழுத்தமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேஎன் மாலையும்ஏற் றருளே பொருள் சாகாக்கல்வியை கற்றுத்தரும் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் இடியாத புவி ஒலியாக்கனல் இந்த 5 சூக்கும…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 79

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 79 மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும் விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும் எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக  எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும் பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே பொருள் : உடல் சுகம் – கலவியால் அடையும் இன்பம் ஜீவன் அடையும் இன்பம் மனம்…

” இவர்கள் இப்படித்தான் “

” இவர்கள் இப்படித்தான் ” 1 தாயுமானவர் : ” சகச நிட்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் ” 2 இன்றைய சன்மார்க்கத்தார் : ” நமக்கும் சாதனத்துக்கும் தவத்துக்கும் – தியானத்துக்கும் ஒளி ஆண்டுகள் தூரம் ” ஆனால் அன்னதானச் சத்திரத்துக்கும் எங்களுக்கும் ரொம்ப அண்மை 3 குண்டலினி யோகத்துக்கும் குண்டலினிக்கும் கோடி ஒளி ஆண்டுகள் தூரம் 4 அரசியல்வாதிக்கும் நேர்மைக்கும் வெகு தூரம் என்ன சரி தானே ?? வெங்கடேஷ்

” மாணிக்க வாசகர் கூறும் அறிவுரை “

” மாணிக்க வாசகர் கூறும் அறிவுரை ” திருவெம்பாவை – பாடல் 4 ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் ” கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம் ” உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந் தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய் பொருள் : கண் மூடி உறங்கி வீணே காலம் கழிக்காது – கண்ணில் இருக்கும்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 78

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 78 கணக்குவழக் கதுகடந்த பெருவெளிக்கு நடுவே கதிர்பரப்பி விளங்குகின்ற கண்நிறைந்த சுடரே இணக்கமுறும் அன்பர்கள்தம் இதயவெளி முழுதும்  இனிதுவிளங் குறநடுவே இலங்கும்ஒளி விளக்கே மணக்குநறு மணமேசின் மயமாய்என் உளத்தே வயங்குதனிப் பொருளேஎன் வாழ்வேஎன் மருந்தே பிணக்கறியாப் பெருந்தவர்கள் சூழமணி மன்றில் பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்அணிந் தருளே பொருள் : இறை தெய்வம் – இப்படி என அளக்க முடியாது உரை மனம் வெளிகள்…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 77

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 77 தலைகால்இங் கறியாதே திரிந்தசிறி யேனைத் தான்வலிந்தாட் கொண்டருளித் தடைமுழுதுந் தவிர்த்தே மலைவறுமெய் அறிவளித்தே அருளமுதம் அருத்தி  வல்லபசத் திகளெல்லாம் மருவியிடப் புரிந்து நிலையுறவே தானும்அடி யேனும்ஒரு வடிவாய் நிறையநிறை வித்துயர்ந்த நிலையதன்மேல் அமர்த்தி அலர்தலைப்பேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : சாகாத்தலை வேகாக்கால் தெரியாத என்னை தானே வந்து தடுத்தாண்டு – வினைத்தடை நீக்கி…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 76

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 76 குணமறியேன் செய்தபெருங் குற்றமெலாங் குணமாக் கொண்டருளி என்னுடைய குறிப்பெல்லாம் முடித்து மணமுறுபே ரருள்இன்ப அமுதமெனக் களித்து  மணிமுடியும் சூட்டிஎனை வாழ்கஎன வாழ்த்தித் தணவிலிலா தென்னுளத்தே தான்கலந்து நானும் தானும்ஒரு வடிவாகித் தழைத்தோங்கப் புரிந்தே அணவுறுபேர் அருட்சோதி அரசுகொடுத் தருளி ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : குணமில்லாமல் நான் செய்த குற்றமெல்லாம் பொறுத்து அதை குணமாகக் கொண்டு – என்…