” தவத்தின் மேன்மை “

” தவத்தின் மேன்மை ” எப்படி நம் செய்திகள் வாட்சப்பில் நம்மிடம் இருந்து சென்றுவிட்டது அவரை அடைந்துவிட்டது அவரும் பார்த்துவிட்டார் என நமக்கு தெரியுதோ ?? அவ்வாறே நம் பிரார்த்தனைகள் வேண்டுதல்களும் இறையிடம் சேர்ந்துவிட்டதா ?? அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதா ?? அதன் நிலை என்ன ?? ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது – நிராகரிப்பு என தெரிந்து கொள்ள முடியும் நமக்கு தகுதி இருந்தால் தெரிவிக்கவும் செய்வார்கள் தகுதி இருப்பின் எல்லாம் தவத்திலும் தகுதியிலும் இருக்கு வெங்கடேஷ்

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை  – 1 

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை  – 1 நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே  நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே பொருள் : இது மிக மிக முக்கியமான பாடலாகும் இதில் தவத்தின் மேன்மை குறிப்பிட்டுள்ளார் வள்ளல் பெருமான் அதாவது…

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 82

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 82 கலைக்கொடிகண் டறியாத புலைக்குடியில் கடையேன் கைதவனேன் பொய்தவமும் கருத்தில்உவந் தருளி மலைக்குயர்மாத் தவிசேற்றி மணிமுடியுஞ் சூட்டி  மகனேநீ வாழ்கஎன வாழ்த்தியஎன் குருவே புலைக்கொடியார் ஒருசிறிதும் புலப்படக்கண் டறியாப் பொன்னேநான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே விலைக்கறியா மாமணியே வெறுப்பறியா மருந்தே விளங்குநடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே. பொருள் : இந்த புழு உடம்பில் கிடக்கும் நான் செய்த பொய்த்தவத்தை மெச்சி ஏற்று –…

வருங்காலம் எப்படி ??

வருங்காலம் எப்படி ?? இந்த ஆருடம் எங்கள் அபார்ட்மெண்ட் நண்பர் கூறியது – உண்மையாகுமா ?? நீங்கள் கூறுங்கள் இப்போது தாய் தந்தையர் ஓரிடத்தில் மகனும் மருமகளும் பேரன் பேத்தி ஓரிடத்தில் என தனித் தனியாக வாழ்கின்றார் இனி வருங்காலத்தில் கணவன் ஓரிடத்தில் மனைவி ஓரிடத்தில் பிள்ளைகள் ஓரிடத்தில் என மூன்றிடத்தில் தனித்தனியாக வாழ்வர் எல்லாரும் தொழில் நுட்ப உதவியுடன் இணைக்கப்பட்டிருப்பர் இது எப்படி இருக்கு ?? – நடக்குமா ?? வெங்கடேஷ்

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” – 78

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” – 78 ” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பெருந்துறை கோவில் அன்னப்படையல் இங்கு அன்னம் தான் படையல் எனினும் அந்த ஆவி தான் உண்மையான நைவேத்தியம் இதன் உண்மைப்பொருள் : விந்துவை பரவிந்துவாக மாற்றி ஆன்மாவுக்கு நைவேத்யம் செய்தால் தான் ஆன்மா ஒளிரும் பிரகாசிக்கும் இது தான் முறை துறை வழி ஆம் வெங்கடேஷ்

” சாதக திசை “

” சாதக திசை ” உலகத்தில் மக்கள் கிழக்கு நோக்கி அமர்ந்து சாதனம் செய்வர் அது சூரியன் திசை என்பர் ஆனால் நல்ல சாதகன் தன் தேகத்தில் தெற்கு திசை நோக்கி சிரசு நோக்கி சாதகம் செய்வான் அது எமனை வெல்லும் திசை வெங்கடேஷ்