” கண்மணிப் பெருமை – திருவடிப்பெருமை “

 ” கண்மணிப் பெருமை – திருவடிப்பெருமை ” ” சுழுமுனை வாசல் திறப்பதும் ” ” சொர்க்க வாசல் – பரமபத வாசல் திறப்பதும்” ” வாசி உருவாதலும் ”  இந்த ” கண்மணி ஆகிய குருமணியால் தான் “ ஆதலால் தான் சித்தர் மொழி : ” வாசல் திறக்கும் மாசில் ஆசான் பக்கல் இருந்தாலே ” இதன் பெருமை சொல்லி மாளாது வெங்கடேஷ்

சுத்த ஞானியர் எப்படி ??

சுத்த ஞானியர் எப்படி ?? ஒரு பைத்தியம் தெளிந்த பின் தான் இப்படி எல்லாம் செய்தோமா ?? என வியப்பது போல் மனம் தெளிந்த ஆன்ம சாதகனும் தான் இத்துணை காலம் மனம் பின்னால் சென்றும் அதன் மயக்கத்தில் இருந்தோமா ?? என் எண்ணி வியப்படைகிறான் இந்த அனுபவம் எல்லார்க்கும் வரும் வெங்கடேஷ்

” கண்மணி கங்கையும் ஆகாய கங்கையும் “

” கண்மணி கங்கையும் ஆகாய கங்கையும் ” கண்மணி கங்கை எனில் கண்ணில் பொங்கி வரும் கண்ணீர் அது பெண்டிர் கண்ணில் வரும்  ஒத்துக்கொண்ட பொருள் கைவரப்பெறவிலையெனில் மேலும் இது சாதகன் தவத்தின் போது கண்ணில் இருந்து ஆறாக பெருகுவதாலும் இதுக்கும் ” கண்மணி கங்கை ” எனவும் பேர் பெறுது ஆனால் ஆகாய கங்கை ?? அது கண்ணில் இருக்கும் ஓர் பொருளினால் இதை உற்பத்தி செய்வதாகும் ” சாதகன் கண்மணி கங்கை உற்பத்தி செய்தால்…

” ஞானியும் சாமானியரும் “

” ஞானியும் சாமானியரும் ” ஞானி சுத்த சிவத்தை ” விலையில்லாமணியே ” என போற்றுகிறான் அதுக்கு விலையே இல்லை –  விலை நிர்ணயம் செய முடியாத பொருள் ஆம் ஈடிணையில்லா சமானம் இல்லா பொருள் என பொருள் அது அரும்பெறல் மணியான பொருள் ஆகையால் ஆனால் அரசியல்வாதியோ அவர் அளிக்கும் இலவசப்பொருளை விலையில்லா கணினி – மிதிவண்டி என பேர் சூட்டுகிறான் என்ன இழிவு ?? ஒருவர் கங்கை மற்றொருவர் சாக்கடை வெங்கடேஷ்

” திருவடி – நயன பயிற்சி- “

1 இன்று   1.2.2019 இருவர் திருவடி பயிற்சி  பெற்றார் ஒருவர் – தேனி மற்றொருவர் – கோவை இருவரும் முது நிலை 2 திருவடி பயிற்சி  விவரம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து  பிரமாணமும் எடுத்துத் தரப்படும்   கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல்…

” அகமும் புறமும் “

” அகமும் புறமும் ” துவாரபாலகர்கள் இருவர் உலகத்தில் காவலர் பார்வை புறத்தில் தான் நம்மை காக்க – நம் உடைமை காக்க  இது புறம் ஆனால் சாதனத்தில் தவத்தில் இவரை புறத்தே நோக்கை தவிரச்செய்து உள்ளே திருப்பிவிட்டால் தான் நாம் பாதுகாப்பாக இருப்போம் கதி அடைவோம் – நற்கதி சேர்வோம் திருவடி அருள் தான் காப்பு வழி துறை வெங்கடேஷ்

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 7

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 7 நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ நெடுமொழியே உரைப்பன்அன்றிக் கொடுமொழிசொல் வேனோ சார்புறவே அருளமுதம் தந்தெனையேமேல் ஏற்றித்  தனித்தபெரும் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான் சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த ஓர்புறவே இதுநல்ல தருணம்இங்கே வம்மின் உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே பொருள் : உலகீர் சன்மார்க்கத்தீர் நீவீர் எனக்கு வேறோ ?? எனக்கு உறவல்லவோ ?? நான் உங்களுக்கு…

உலகம் எப்படி ??

உலகம் எப்படி ?? மூளையால் உழைப்பவர்கள் நாட்டை ஆள்கிறார்கள் தன்னையும் – தன் உடலையும் ஆட்சி செய்கிறார்கள் இவர்கள் பொது மேலாளர்கள் – தொழில் அதிபர்கள் ஆகவும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியும் வருவர் ஆனால் உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகிறார்கள் இவர்கள் கீழ் நிலையில் உள்ளார் தோட்டக்காரர் – காவலர் பணி என செய்கின்றார் ஒருவர் ஓட்டல் அதிபர் எனில் மற்றொருவர் அதில் உணவு பரிமாறுபவராகவும் உள்ளார் ஒருவர் தவம் செய்தால் மற்றொருவர் அன்னதானம் மட்டும் செய்கிறார் இது…