சிரிப்பு 315 

சிரிப்பு 315 செந்தில் : ஏன் அண்ணே உங்க மகனை பானி பூரி கடையில பாக்க முடியலே ? க மணி : ஆமாண்டா – எப்போ அவன ஜிம்ல சேர்த்தேனோ அப்ப இருந்து அதைய சாப்பிட்றத நிறுத்திட்டாண்டா செந்தில் : ஆஹா ரெம்ப நல்ல பழக்கமாச்சே – க மணி : ஆமாண்டா – அவன ஏண்டா ஜிம்ல சேர்த்தோம்னு ஆயிடுச்சி 1 வெள்ளை அரிசி சாப்பிடாத – மட்ட அரிசி சாதம் தான் நல்லது…

” ஒண்ணுக்குள்ளே ஒண்ணு “

” ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ” இதை எளிதாக புரியவைக்கவா ?? நான் உன்னை ஆட்சிக்கட்டிலில் உட்கார ஆட்சிக்கு வர உதவி செய்கிறேன் வந்தவுடன் எனக்கு தேவையானதை – அதிகமாக – அதுவும் மிக மிக அதிகமாக செய்ய வேணும் இது தான் அது இப்படித்தான் உள்ளது அரசியல் கட்சியினர்க்கும் அரசு ஊழியர் சங்கத்துக்கும் இருக்கும் உறவு இவர்கள் இருவரும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்ன உண்மை தானே ?? வெங்கடேஷ்

” விழிப்புணர்வின் பெருமை – 2 “

விழிப்புணர்வின் பெருமை – 2 ” நாம் நம் உடலில் காயம் ஏற்பட்டால் யாரும் அதன் மீது மோதாமல் இருக்கவும்  நாமும் எதன் மீது மோதாமல் பார்த்துக்கொள்கிறோம் இது விழிப்புணர்வு ஆம் இது விபத்தை தவிர்க்க உதவும் பெரிதாக அது போல தான் அக விழிப்புணர்வும் ஆம் இது 24*7 இருந்தால் மிக்க நலம் இதுவும் மனதில் எழும் வேண்டாதவைகளை அறியவைத்து அதில் இருந்து நம்மைக் காப்பாத்தும் நம் அறியாமையை விலக்கும் விளக்காகும் வெங்கடேஷ்

தெளிவு 442

தெளிவு 442 சிதம்பர ரகசியம்- பகுதி-3 பிறப்பு எடுக்க ஒரு யோனி,  பிறப்பு அறுக்க ஒரு யோனி, பிராணன் உட்புக ஒரு குதம், அபானன் வெளியேற ஒரு குதம், சளி வெளியேற ஒரு குதம், மலம் வெளியேற ஒரு குதம், மாயையில் நாம் அகப்பட ஒரு கன்னித்திரை, நம்மில் மாயை அகப்பட ஒரு திரை, கீழ்த்திரை கிழிந்தால் மாயை, மேல்திரை விலக்கினால் சாயை, கீழ்த்திரை விலக்கினால் தான் விந்து கருப்பையை அடைந்து கரு உருவாகி குழந்தையை காணமுடியும்.…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 10

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 10 ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன் ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்  எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான் தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத் திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே. பொருள் : ஆசை உண்டெனில் சன்மார்க்கம் அணைமின் – அபெஜோதியர் – அம்மை அப்பனுமாய் இணைந்து…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 9

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 9 களித்துலகில் அளவிறந்த காலம்உல கெல்லாம் களிப்படைய அருட்சோதிக் கடவுள்வரு தருணம் தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே  செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம் உலகீர் ஒளித்துரைக்கின் றேன்அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன் ஒருசிறிதும் அச்சமுறேல் உள்ளபடி உணர்ந்தேன் அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடை யீரே பொருள் : இந்த நீடுலகில் அளவிறந்த காலத்துக்கும் இன்பம் அளிக்க அபெஜோதியர் எழுதருள்கின்ற சமயம் எது என…

” இதுவும் அதுவும் ஒன்று “

” இதுவும் அதுவும் ஒன்று ” எப்படி ஒரு மாம்பழத்தை கல்லால் கனிய வைப்பதோ ? வாழையை புகையால் கனிய வைப்பதோ ?? எல்லா கனிகளை ரசாயனத்தால் கனிய வைப்பதோ ?? அவ்வாறே தான் மொட்டு மலரும் முன் முட்டி முட்டி மோதுதலும் வாசி உருவாக நாக்கை அறுத்து மடித்து உள் வைத்தலும் உடற்பயிற்சி செய்தலும் – சுவாசப் பயிற்சி செய்தலும் குண்டலினி எழுப்ப ஆசனம் சுருக்குதலும் பிராணாயாமம் செய்தலும் ஆம் இதெல்லாம் பயனின்று மேலும் இது…