” இதுவும் அதுவும் ஒன்று தான் “

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” எப்படி உலகத்தில் கண்ணுக்கு தனி மருத்துவர் இதயத்துக்கு தனி மருத்துவர் சிறு நீரகத்துக்கு தனி மருத்துவரோ ?? அப்படித்தான் குண்டலினி எழுப்ப தனி யோகம் வாசி உருவாக்க தனி யோகம் நல்ல ஜோக் – சிரிப்பு – ஹாஸ்யம் தான் ஆனால் ஒரு யோகம் எல்லாத்தையும் இணைச்சிவிடும் அது யார்க்கும் தெரியவிலை அருளுக்கு்ம் திருவடிக்கும் தான் வெளிச்சம் வெங்கடேஷ்

” தவத்தின் பெருமை “

” தவத்தின் பெருமை ” மனம் அதன் சுய ரூபம் வெளி வந்து பின் அது முழுதும் அடங்கி நம் சுய ரூபமாம் ஆன்மாவின் சுயரூபம் வெளிப்படுத்தும் இது யாவும் திருவடியின் அருளால்  நடக்கும் வெங்கடேஷ்

சிரிப்பு 316 

சிரிப்பு 316 செந்தில் : அண்ணே நம்ம ஜனங்க ரெம்ப மோசமாயிட்டாங்க ?? க மணி : என்னடா ஆச்சி ?? செந்தில் : ஆமாண்ணே – பாருங்க நடு ராத்ரியில தான் பேய்ங்க சாப்பிடும்பாங்க நம்ம ஜனங்களும் அப்படியே தான் ஆயிட்டாங்க ராத்திரி 10 மணிக்கு ஸ்விக்கில ஆர்டர் பண்ணா 80% தள்ளுபடி – அதனால அப்படி செஞ்சி நடு ராத்திரியில் சாப்பிட்றாங்க க மணி : எல்லாம் கலி காலம்டா – என்னத்த சொல்றது…

இவர்கள் இப்படி ??

இவர்கள் இப்படி ?? ஊதுவதில் எப்படி என பார்ப்போம் ?? ஆண்கள் இளைஞர்கள் சிகரெட் ஊ ஊ என ஊதிக்கொண்டே இருப்பர் வீட்டுப்பெண்கள் வெங்காயம் பூண்டு தோலை  ஊதிக்கொண்டே இருப்பர் யோக சாதகர் வாசியை  ஊதிக்கொண்டே இருப்பர் நல்ல நிலைக்கு – அனுபவத்துக்கு வந்துவிட்ட ஆன்ம சாதகர் வினையை  ஊதி விடுவர் விளையாட்டில் நல்ல திறமையான அணி எதிர் அணியை  ஊதி்விடுவர் புத்தி கூர்மையானவர் – மதியூகிகள் வாழ்வில் பிரசனைகளை  ஊதி விடுவர் நான் சொல்வது உண்மை தானே…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 11

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 11 அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே  காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே பொருள் : உலகீர் பெரு நெறியாம் திரு நெறியாம் சன்மார்க்கத்தை விரைந்து அணைமின் – ஐயன் அப்பன்…

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” – 81

 ” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ” – 81 ” கொடைக்கானல் – குறிஞ்சி ஆண்டவர் கோவில் ” இது முருகன் கோவில்  குறிஞ்சிப் பூ 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடைத்து அதே போல் தான் ஆன்மாவாகிய முருகனும் ” 12 ஆண்டு ” தவத்தால் விந்துவைக் கட்டி மணியாக்கினால் சுப்பிரமணி எனும் குறிஞ்சிப்பூ பூக்கும் குறிஞ்சிப்பூ = ஆன்மா குறிஞ்சி ஆண்டவர் = ஆன்மா ஆன்மா பூவாக கற்பிதம் செயப்பட்டுள்ளது…

”  காதல் பெருமை “

”  காதல் பெருமை ” பெண் எனும் நூலில் இரவில் ” நகவரியால் ” எழுதினால் அவள் மெய்சிலிர்த்து  அது ” சுகவரி ” என்பாள் அது ” இன்பவரியும் ” ஆகும் வெங்கடேஷ்

” இணையும் நிறையும் “

”  இணையும் நிறையும் ” ” உலக வாழ்விலும் – தவத்திலும் நமக்கு சரியான இணையுடனும் பொருத்தமான இணையுடனும் இணையும் போது தான் நாம் நிறை அடைகிறோம் “ அது வரையில் நாம் அலைகடலில் துரும்பு தான் போக்குவரத்துடைய பொருள் தான் இது உண்மை வெங்கடேஷ்