” வாழ்க்கைக் கல்வி “
” வாழ்க்கைக் கல்வி ” இறந்து இறந்தும் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் கையேந்தி பிறரிடம் இரந்து இரந்து வாழவே கூடாது வெங்கடேஷ்
” வாழ்க்கைக் கல்வி ” இறந்து இறந்தும் கூட வாழ்ந்து விடலாம் ஆனால் கையேந்தி பிறரிடம் இரந்து இரந்து வாழவே கூடாது வெங்கடேஷ்
தெளிவு 446 எப்படி எல்லா நோய்க்கும் ஒரே மருந்தோ ?? அது காயகல்பமோ ?? அதே போல் தான் எல்லா அனுபவமும் ஒரே யோகத்தில் அடக்கம் குண்டலினி வாசி அமுத தாரணை காய சித்தி மரணமிலாப்பெரு வாழ்வு முத்தேக சித்தி எல்லாம் ஒன்றில் அடங்கும் அதை அறிந்தார் ஆற்றுவார் அறியாதார் ?? திருவடிக்கும் அருளுக்கும் தான் வெளிச்சம் வெங்கடேஷ்
சிரிப்பு 316 மகன் : அம்மா எனக்கு வெள்ளை நிறப்பொருட்கள் வேண்டாம் அரிசி சர்க்கரை ரொட்டி பால் அம்மா : ஏண்டா என் ராசா ?? மகன் : அது உடலுக்கு நல்லதில்ல – கெடுதி தான் அப்பா : ஆனா கட்டிக்கிற பொண்ணு மட்டும் நல்ல சிகப்பா வெள்ளையா இருக்கணும் இல்ல ?? மகன் : ஹி ஹி இது நிதர்சனம் வெங்கடேஷ்
” பூவிழி வாசலும் – கோபுர வாசலும் ” பூ விழி வாசலில் இருப்பவனை பிடித்தால் தான் கோபுர வாசலுக்கு போக முடியும் அது திறந்தால் தான் கோபுரத்துக்கு செல்ல முடியும் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைத்து வெங்கடேஷ்
தெளிவு 445 எத்தனை முறை தான் ராமாயணத்தை பாராயணம் செய்தாலும் இரு அயணத்தை கடக்க முடியாது அதன் ரகசியம் இரு அயனங்களில் உள்ளது வெங்கடேஷ்
” தருமபுரி – தருமபுரம் ” – சன்மார்க்க விளக்கம் இவை ரெண்டும் ஊர் – ஆதினம் பேர்களாம் ரெண்டும் ஆன்மாவின் வெளிப்பாடு தான் தருமம் = ஆன்மா ஆகையால் – இது ஆன்மாவின் இடம் என்ற பெயரில் வழங்குகிறது வெங்கடேஷ் 1
தெளிவு 444 உழைப்பில்லாமல் ஓய்வை அடைய முடியாது தவம் செய்யாமல் அமைதி ஆனந்தம் மௌனம் தனையறியும் ஆன்ம அறிவு பெற முடியாது நோவாமல் நோன்பு நோற்க முடியாது வெங்கடேஷ்
முடமும் மூடமும் ” உடல் உறுப்பு கை கால் செயலிழந்தால் அது முடம் அதே மூளை மனம் செயலிழந்தால் அது மூடம் அவன் மூடன் வெங்கடேஷ்
தெளிவு 443 உலகம் பத்திய அறிவை ரகசியத்தை இந்த உலகம் மூலமாகவே அறிய வேணும் அது போலவே சிவம் பற்றிய ரகசியத்தை சரீரம் மூலமாகவே அறிய வேணும் இது இயற்கை நியதியும் விதியும் ஆம் வெங்கடேஷ்