” வாழ்வின் நிதர்சனம் “

” வாழ்வின் நிதர்சனம் ” எப்படி ஓர் மனம் பிறழ்ந்தவரைத் தெளிவிக்க அவர் சந்தித்த அதே  அதிர்ச்சி – உலுக்கல் சம்பவத்தை நடத்தினால் தெளிவாரோ ?? அவ்வாறே தான் இயற்கையும் சாதகனைத் தெளிவிக்க அவர் வாழ்வையே புரட்டிப்போடும் அதிர்ச்சி கொடுத்து அவன் வாழ்வின் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் அது மிகப்பெரிய முன்னேற்றத்துக்கு வழி கோலும் அது மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமையும் வெங்கடேஷ்

” மனம் எப்போது பலவீனம் அடையும் ” ??

” மனம் எப்போது பலவீனம் அடையும் ” ?? சாதகன் தவத்தில் இருக்கும் சமயம் அதன் தன்மை குணம் அமைதி – எண்ணமிலா சுகம் – ஆனந்தம் கண்டு இப்போ அதிகப்படுத்தலாமா ?? எனக்கேட்டால் மனம் ஆஹா என்ன சுகம் சுகம் இது இத்தனை நாள் வரையில் தெரியாமல் போய்விட்டதே?? எனக்கூறி ஒத்துக்கொள்ளும் மற்ற நேரத்தில் வழிக்கு வராது இது தந்திரம் மனதை வசியப்படுத்தும் வழி வெங்கடேஷ்

”  வாழ்வின் நிதர்சனம் “

”  வாழ்வின் நிதர்சனம் ” ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் மட்டுமல்ல கண்டேன் ஈசன் தன் பெருமையை மௌனத்தால் அது கற்றுத்தரும் அருமையையும் திருவடியால் ஆற்றும் அருள் விளையாட்டின் தன்மையிலும் செல்வம் – இளமை – கல்வி செருக்குற்றோரை அடக்கி பாடம் கற்பிக்கும் திறத்தைக் கண்டும் அறிந்தேன் உணர்ந்தேன் அவன் தன் பெருமையை வெங்கடேஷ்

திருவடி – கண் தவம் அனுபவங்கள் – 3

திருவடி – கண் தவம் அனுபவங்கள் – 3 1 உடல் உறுப்புகளை மாற்றி அமைக்கும் வல்லமை இந்த கண்மணிக்கு உண்டு – இது தான் உண்மையான காயகல்பம் ஆம் – மன்றத்தில் கற்றுத்தருவது அல்ல 2  உடல்  இயக்கத்தையும் மாற்றி அமைக்கவும் செயும் இவ்வாறு செய்வதை விஷன் தெரியப்படுத்தும் உறுதி செயும் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் சின்ன வீட்டில் இடத்தில் அதிக பொருட்கள் சாமான்கள் ஆட்கள் இருந்தால் எப்படி சுத்தம் இல்லாமல் ஒரே குப்பையும் கூளமமுமாக இருக்குமோ ?? அவ்வாறே தான் சின்ன மனதில் கடல் அளவு ஆசைகள் மனோரதங்கள் இருப்பின் அதுவும் குப்பையும் கூளமும் தான் வெங்கடேஷ்