அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 21
சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே.
பொருள் :
சுத்த சன்மார்க்கம் எனும் திரு நெறி பெரு நெறி அணைமின் – சித்தி எலாம் பெறலாம்
உண்பதுக்கும் உறங்குவதுக்குமே அறிந்தீர் – உலகமெலாம் கண்காணிக்கும் ஓர் பொருளை அறியீரே
உலகெலாம் அறிய வரும் மரணம் என்ற ஒன்று உண்டே – அது வரின் சடம் கூட சம்மதிக்காதே
அப்படிப்பட்ட மரணத்தை தவிர்த்திடலாம் – எப்போது ??
சிற்சபை நடத்தை தரிசனம் செய்தால் – அதை துதித்தால் அல்ல
அங்கு சிற்றம்பலம் சென்று புகுந்து அந்த அருள் திரு நடம் கண்டு அனுபவித்தால் எங்கிறார் வள்ளல் பெருமான்
மனித குலம் உய்யும் வகை தெரிவித்தவாறு
வெங்கடேஷ்