சித்தர் பாடல்
சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால்
மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே
பொருள் :
சங்கிரண்டு = இரு சுவாச கதிகள் – இடகலை பிங்களை
தாரை ஒன்று = சுழுமுனை நாடி
ரெண்டு சுவாச நாடிகள் பின்னல் போல் பின்னிப்பிணைந்துள்ளன
ஆதலால் சுவாசம் வீணாகி மனிதர் மாண்டு் போகின்றாரே
இரு சுவாசத்தையும் நீக்கி – தவிரச்செய்து – சுழுமுனை சுவாசம் செய்தால் – உள் சுவாசம் – வாசி ஆக மாற்றி மேலேற்றினால் – சிவத்தோடு சேரலாமே
சித்தர் பெரு மக்கள் மனித குலம் உய்யும் வகை தெரிவித்தவாறு
வெங்கடேஷ்