” ஞானியும் சாமானியரும் “

” ஞானியும் சாமானியரும் ” சாமானியர் – அரசியல்வாதி ” உலகெல்லாம் மாள கற்றுக்கொடுக்கிறார்” அதை செயல்படுத்துகிறார் ஆனால் ஞானியோ ” உலகெல்லாம் காண ஆள கற்றுக்கொடுக்கிறார்” ரெண்டு பேரும் இரு துருவம் தானே?? வெங்கடேஷ்

தெளிவு 461

தெளிவு 461 எப்படி அலைபேசி சமிக்ஞை – சிக்னல் விட்டு விட்டு வருமோ  அப்படித்தான் விழிப்புணர்வும் அதுவும் வரும் போகும் – வரும் போகும் நிலைக்க செய்வது நம் சாதனா பலம் வெங்கடேஷ்

” தவம் – பெருமை “

” தவம் – பெருமை ” தவம் மேற்கொள்ளாதோர் ஆற்றாதோர் சிறகு முளைக்காத இறகு முளைக்காத பறவைகளுக்கு சமம் சிதாகாயத்துக்கு பறந்து போக முடியாது வெங்கடேஷ்

” குரு வணக்கம் “

” குரு வணக்கம் ” நல்லூர் தேரடிச்சித்தர் செல்லப்பாசுவாமிகள் குறித்து யாழ்ப்பாணம் சிவயோகசுவாமிகள் பாடியவை என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன் இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன் அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன் அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன் முன்னைவினை நீக்கிவிட்டா னெங்கள்குரு நாதன் மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன் நன்மைதீமை யறியாதா னெங்கள்குரு நாதன் நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன் 1 தேகம்நீ யல்லவென்றா னெங்கள்குரு நாதன் சித்தத்திற் றிகழுகின்றா னெங்கள்குரு நாதன் மோகத்தை முனியென்றா னெங்கள்குரு…

“ வெள்ளை மாளிகை”

“ வெள்ளை மாளிகை”   புறத்திலே இருக்கும் வெள்ளை மாளிகை நாட்டுக்கு போவதே எல்லா மென்பொறியாளர் – மேற்படிப்புக் கல்வியாளர் கனவு   ஆனால் ஆன்ம சாதகரோ தன் அகத்தில் விளங்கும் “ ஏழு நிலை மாடம் ஆம் வெள்ளை மாளிகை “ ஏறுவதே பெரும் கனவு லட்சியம் ஆகக்கொண்டு உள்ளார்   புறத்தை விட அகம் மிக சிறந்தது   வெங்கடேஷ்