இதுவும் அதுவும் ஒன்று தான்
ராமன் கோதண்டத்தை வளைத்தான் என்பதும்
சாதகன் பிரணவத்தை வளைத்தான் என்பதும்
அதே சாதகன்
தன் கண்களை உள்ளே திருப்பினான் என்பதும் ஒன்று தான்
ராமன் அம்பு எய்தினான் என்பதும்
சாதகன் கண்ணிலிருந்து பார்வையை
மேல் செலுத்தினான் என்பதும் ஒன்று தான்
உள் யோக ஞான அனுபவம் தான்
வெளியில் இதிகாச புராணமாக உருவகம் ஆகியிருக்கு
யாரே அறிவார் இந்த ரகசியத்தை??
வெங்கடேஷ்