“ அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம்

“ அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம்   இந்த அக்ஷதையை நாம் அனைவரும் திருமண ஜோடிகளுக்கும் – மற்றும் விசேஷங்களிலும் தூவுவோம்   இது   அரிசியும் மஞ்சளும் கலந்ததாகும் அதாவது வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறத்துடன் இருக்கும் இது ஆன்மாவின் நிறமாகும்   அதாவது அக்ஷம் = கண் – கண்ணில் இருந்து ஆன்ம ஒளி வந்து மணமக்களை வாழ்த்துவதாக /ஆசிர்வதிப்பதாக  நம் முன்னோர்  வைத்திருக்கும் சடங்கு ஆம்   வெங்கடேஷ்  

இவர்கள் இப்படி

இவர்கள் இப்படி 1 மாணவர்கள் காதலர்கள் தத்தம் பெற்றோர் கண்காணிப்பு வளையத்தில் 2 அரசியல்வாதிகள் பெரும் தொழில் அதிபர்கள் வருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்தில் அமலாக்கத்துறை கண்காணிப்பு வளையத்தில் 3 ஆனால் ஆன்ம சாதகரோ அருள் – அருளாளர் கண்காணிப்பு வளையத்தில் இருக்கார் வெங்கடேஷ் 3

தெளிவு 494

தெளிவு 494   வீட்டின் பின் பக்க கதவு வழியாக ஒருவன் உள் வந்தால் அவன் திருடன் கள்வன் வீட்டை துடைத்து சுத்தமாக்கி சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவான்   அதே ஆன்மாவும் பின் வாசல் வழியாக வந்தாலும் அதுவும் சுத்தம் செய்யும் நம்மில் இருக்கும் எல்லா துர்க்குணத்தை நீக்கி சுத்தம் செய்யும் அவனும் கள்வன் தான் ஆனால் உள்ளம் கவர் கள்வன் அவன் எல்லா பேற்றையும் நல்கி நம் வாழ்வை வளமாக்கும்   ரெண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு உலகளவு…

மனிதரில் இத்தனை நிறங்களா ??15

மனிதரில் இத்தனை நிறங்களா ??15   உண்மைச்சம்பவம் – கோவை   இது நடந்தது சில ஆண்டுக்கு முன் ஒரு மேலாளர் கனடா  நாட்டில் இருந்து  என் ஆபிசுக்கு வந்தார் அங்கும் பஞ்சாலையில் தான் பணி செய்தாராம்   அவர் மனைவி மிகவும் ஆளுமை கொண்டவர் என்பார் – அவர் வைத்தது தான் சட்டம் நினைத்தது நடக்க வேணும் – சிம்ம ராசி என பெருமை பேசுவார்   அவரே வீட்டின் எல்லா பொறுப்பையும் எடுத்துக்கொண்டு செய்பவராம்…