பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி
பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95 பொருள் : மூலாக்கினி எழுப்பி , அதனுடன் விந்துவைக் கூட்டி – அதை உச்சிக்கு செலுத்தி – பின்னும் மேல் செலுத்தி – முழு நிலா அமைத்து – அதிலிருந்து அமுதம் இறக்கி – பசி தீர்வது எப்போது ?? வெங்கடேஷ்