மனிதரில் இத்தனை நிறங்களா ??

மனிதரில் இத்தனை நிறங்களா ??   உடல் பெருத்துள்ளோர் உடல் பயிற்சி நிலையமே கதி என்றிருக்கார்   சாமானியர் சிலர் சின்ன வீடே கதி என்றிருக்கார் பெண் முலை – அல்குல் தான் கதி என்றிருக்கார்   சாதகர் சிலர் சுவாசமே கதி என்றிருக்கார்   மேலும் சிலர் திருவடியே – அருளே கதி என்றிருக்கார்   சுவாச கதியையே காண்பார் சிற்றம்பலத்தில் விளங்கும்  கதி காணார்   வெங்கடேஷ்  

“ ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “

“ ஔவைக்குறளும் சாகாக்கல்வியும் “   ஔவைக்குறள் : பரமாய சத்தியுள் பஞ்சமாபூதத்தின் தரம் மாறில் தோன்றும் பிறப்பு   அதாவது 5 பூதங்களின் தரம் மாறிப்போனால் நாம் பிறப்பு எடுப்போம்   அப்படியானால் அதே 5 பூதங்களின் தரத்தை மீண்டும் நிலை நிறுத்தினால் – நாம் பிறப்பிறப்பற்ற நிலை அடைவது உறுதி என ஆகிறது   எப்படி செய்வது ?? ஆற்றுவது?   மண் – இது இடியாப்புவி ஆக மாற வேணும் நீர் –…

 பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி 

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி   தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல் நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்? 90 பொருள் : இந்த உடல் எனும் ஏணி கொண்டு நடக்காமல் – நூல் ஏணி ஆகிய சுழுமுனை நாடியில் பயணித்து உச்சி நோக்குவது எக்காலம் ??   தோல் ஏணி = உடல் நூல் ஏணி – சுழுமுனை நாடி   வெங்கடேஷ்  

வயலூர் – ஊர் பெருமை சிறப்பு

வயலூர் – ஊர் பெருமை சிறப்பு   இது முருகன் திருத்தலம் வயல் எனில் நீர் சூழ்ந்த இடம் தெய்வம் இருக்கும் இடமும்  நீர் சூழ்ந்த இடமாகையால்  – இந்த இடத்துக்கு இப்படி பேர் வைத்து – அங்கு ஆன்மாவாகிய முருகனை ஸ்தாபித்துள்ளனர் நம் முன்னோர்   ஆன்மாவின் இருப்பிடமும் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது உண்மை இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆகும்   தெய்வத்தின் இருப்பிடத்தை பலப்பல பேர்களில் பலப்பல கோவிலகளை பலப்பல இடங்களில்…