ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   களவும் கற்று மற இது சாமானியர்க்கு   ஆனால் ஞானியர்க்கு “ கற்றது யாவும் மறக்கப் பழகணும் “ அதுவும் நொடியில் நடக்கணும் அப்போது தான் ஞானியாக முடியும்   வெங்கடேஷ்

நிதர்சனம் – இதுவும் அதுவும் ஒன்று

நிதர்சனம் இதுவும் அதுவும் ஒன்று   அரசு ஊழியர்க்கு அளிக்கப்படும் சலுகைகள்  விடுமுறை பறிக்கப்பட்டால் அவர் எப்படி கொதித்துப்போவாரோ ?? –   அவ்வாறே தான் மனமும் இத்துணை நாளும் அளித்து வந்த உணவு –  சுகம் புலனின்பம் – கரண இன்பம் பறித்தால் அதுவும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் படிப்படியாக பறிக்க வேணும் மெள்ள மெள்ள விஷம் வைக்க வேணும்   வெங்கடேஷ்

  வாழ்க்கைப்பாடம்

வாழ்க்கைப்பாடம்   எல்லா நேரத்திலும் நல்லவனாக இருப்பது கை கொடுக்காது இருக்கவும் கூடாது பல நேரங்களில் சாமர்த்தியம் தான் கைகொடுக்கும் சமயோசிதம் – சாதுர்யம் தான் உதவும் “   வெங்கடேஷ்