நிதர்சனம்
இதுவும் அதுவும் ஒன்று
அரசு ஊழியர்க்கு அளிக்கப்படும்
சலுகைகள் விடுமுறை பறிக்கப்பட்டால்
அவர் எப்படி கொதித்துப்போவாரோ ?? –
அவ்வாறே தான் மனமும்
இத்துணை நாளும் அளித்து
வந்த உணவு – சுகம்
புலனின்பம் – கரண இன்பம் பறித்தால்
அதுவும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும்
படிப்படியாக பறிக்க வேணும்
மெள்ள மெள்ள விஷம் வைக்க வேணும்
வெங்கடேஷ்