தமிழ் பழமொழிகள் – வழக்கும் உண்மையும்

தமிழ் பழமொழிகள் – வழக்கும் உண்மையும்   1 வழக்கு – கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே உண்மை :  கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே   2 வழக்கு – கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான் உண்மை :  கண்டு அதை கற்றவன் பண்டிதன் ஆவான்   3 வழக்கு – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீச் வேலை உண்மை :  வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீச்…

   பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?   பொருள்  எல்லாம் இறந்த நிலையில் – சொல் உட்பட – ஒருமை ஓங்கும் ஆன்மாவில் சிந்தை பதிந்து அதன் மேல் அன்பு வைப்பது எக்காலம் ??   வெங்கடேஷ்:

  பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்?   பொருள் :   நாம் நினைக்கும் போதெல்லாம் நிறைந்த முழுமையை பூரணத்தை சுழுமுனை மேல் கண்டு கண்ணில் நீர் உதிர்ப்பது எப்போது ??   ஆன்மாவைக்கண்டு எப்போது அழுவது என வினவுகிறார் சித்தர் ??   வெங்கடேஷ்

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?   பொருள் : கண்ணில் இருக்கும் திருவடி பாய்ந்தது  – கண் ஒளி பிறந்தது அதனால் வித்தை விளங்கிற்று விண்ணில் இருக்கும் ஆன்ம ஒளி கண்டதும் ஆயிற்று ஆன்ம ஒளி விளங்கி வெளிப்படுவது எப்போது ??   வெங்கடேஷ்  

    தெளிவு 505

தெளிவு 505   கடலில் புயல் மையம் கொண்டால் நிலத்தின் கண் உள்ள எல்லா ஈரப்பதத்தையும் உறி ஞ்சிவிடும்   அதே போல் நம் மனதில் கோபம் குரோதம் மையம் கொண்டால் நற்குணங்கள் யாவையும் உறிஞ்சிவிடும்   வெங்கடேஷ்