தமிழ் பழமொழிகள் – வழக்கும் உண்மையும்
1 வழக்கு – கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
உண்மை : கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே
2 வழக்கு – கண்டதை கற்றவன் பண்டிதன் ஆவான்
உண்மை : கண்டு அதை கற்றவன் பண்டிதன் ஆவான்
3 வழக்கு – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை
போக்கத்தவனுக்கு போலீச் வேலை
உண்மை : வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை
போக்கு தெரிந்தவனுக்கு போலீச் வேலை
4 வழக்கு – பழம் நழுவி பாலில் விழுந்தது
உண்மை : பழம் நழுவி பாகில் விழுந்தது
5 வழக்கு – அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
உண்மை அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும் :
வெங்கடேஷ்