தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் :
1 வழக்கு – ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
உண்மை : அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்
2 வழக்கு – ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
உண்மை : நல்லது ஆவதும் பெண்ணாலே – தீயவை அழிவதும் பெண்ணாலே
3 வழக்கு – கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்
உண்மை கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம்
4 வழக்கு – : கல்லைக்கண்டால் நாயைக்காணோம் – நாயைக்கண்டால் கல்லைக்காணோம்
உண்மை : கல்லைக்கண்டால் நாயகனைக்காணோம் – நாயகனைக்கண்டால் கல்லைக்காணோம்
5 வழக்கு – குரைக்கிற நாய் கடிக்காது
உண்மை : குழைகிற நாய் கடிக்காது
வெங்கடேஷ்