தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் “ உப்பிட்டவனை  உள்ளளவும் நினை “ வழக்கு : உலக நடையில் நமக்கு படி அளக்கும் எசமானரை நம் உயிர் உள்ளவரை நன்றி மறவாமல் இருக்கோணும் நல்ல சிரிப்பு உண்மைப்பொருள் இந்த உடல் தான் உப்பிட்ட பாண்டம் இதை நமக்கு அருளியவன் அந்த சிவம் அந்த சிவத்தை நாம் உள்ளத்தில் – ஆன்மாவில்  வைத்து நினைக்க வேணும்   வெங்கடேஷ்

  மனம் இப்படித்தான்

மனம் இப்படித்தான் எப்படி எனில்   சிறு வயதில் வீட்டில் விருந்தினர் வந்தால் பள்ளிக்கு மட்டம் போடலாம் என சொல்லும்   அதே வளர்ந்த பின்னும் அது மாறுவதே இல்லை இப்போதும் விருந்தினர் வந்தக்கால் அதனால் சாதனம் வேணாம் என சொல்லும்     நாம் எவ்ளோ  தான் வளர்ந்தாலும் மனம் மட்டும் மாறுவதே இல்லை அது தன் ஆசை குறைத்துக்கொள்வதே இல்லை     வெங்கடேஷ்  

திருவடி தவத்தின் அனுபவங்கள்

திருவடி தவத்தின் அனுபவங்கள்   இது செய்து நல்ல நிலை வந்த பின் – சில நேரத்தில் அதிக அரிப்பு ஏற்படும் அதாவது மீசையில் மூக்கு நுனியிலும் மூக்கிலும் அரிப்பு  ஏற்பட்டு சில சமயம் புண்ணாகி விடும்   சாதனத்தின்  உஷ்ணத்தினால் இது ஏற்படுது – இது இந்த இடங்களில் தேங்கி நிற்கும் கழிவுகளை நீக்கி விடுது   வெங்கடேஷ்  

   வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   வாழ்வில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமோ ?? அப்படித்தான் அலை பேசியில் சார்ஜ் ஏறுவதும் அவ்ளோ நேரம் பிடிக்கும்   ஆனால் பணம் செலவழிப்பது எவ்வளவு எளிதோ ?? அப்படித்தான் செல்ஃபோன் சார்ஜ் இறங்குவதும் அது வேகமாக இறங்கும்   பணம் வேகமாக கரையும் சார்ஜ் வேகமாக இறங்கும்   வெங்கடேஷ்  

 பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும் தானாகி நின்றதனை அறிவது எக்காலம்?   பொருள் : உடல் ஆகி அந்த உடலில் தங்கி இருக்கும் உயிராகி – எல்லா உலகமும் தானாகி – சர்வ வியாபி ஆக விளங்கி நிற்கும் சிவத்தை அறிவது எப்போது ??   வெங்கடேஷ்