வாழ்வியல் ரகசியங்கள் * சித்தர்களின் நுட்பம்

வாழ்வியல் ரகசியங்கள் * சித்தர்களின் நுட்பம்   🌻பஞ்ச முத்திரை🌻 கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ. கேசரி – விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல். பூசரி – விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். மத்திய லக்ஷணம் – கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக்…

மக்கள் எப்படி ??

மக்கள் எப்படி ?? உலக மக்கள் இந்த ஆட்டம் ஆட்றார் பாண்டி ஆட்டம் – தேவராட்டம் கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் – பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆனால் ஞானியோ ஆடுவது அருளாட்டம் அருள் அவர் வாழ்வில் விளையாடுவது தான் அது இது மற்றவர்க்கு தெரியாது காண முடியாது அவர் உரைத்தால் தான் உண்டு   வெங்கடேஷ்  

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் எப்படி  உடல் நோய்கள் முத்தின பிறகு தான் ஒருவனுக்கு தன்னை வெளிப்படுத்துதோ ??   அப்படித்தான் மனம் சார்ந்த காதல் நோயும் முத்தின பிறகு தான் வீட்டிற்கும் பெற்றோர்க்கும் தெரியவரும் ஆரம்ப கட்டம் யார்க்கும் தெரியவே தெரியாது வெங்கடேஷ்

 நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் கடலில் மூழ்கி முத்து எடுக்கத் தெரிந்த நம் மக்களுக்கு தம் சிரசில் இருக்கும் அமுதக்கடலில் மூழ்கி முத்துக்குமரனை  எடுக்கத்தெரியாதது முத்துக்குமரன் = ஆன்மா  முருகன்   வெங்கடேஷ்  

  பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்? 198 பொருள் : உடல் கீழ் விழு முன் – அதை விட்டு உயிர் பிரியும் முன் – அமுதம்  உற்பத்தி செயும் விதம் கல்வி அறிவது எப்போது ??   ஆவின் பால் = அமுதம்   வெங்கடேஷ்