வாழ்வியல் ரகசியங்கள் * சித்தர்களின் நுட்பம்

வாழ்வியல் ரகசியங்கள் *
சித்தர்களின் நுட்பம்

 

🌻பஞ்ச முத்திரை🌻

  1. கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ.
  2. கேசரி – விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல்.
  3. பூசரி – விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல்.
  4. மத்திய லக்ஷணம் – கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல்.
  5. ஷண்முகீ – காதுகளையும், கண்களையும், மூக்கையும், வாயையும், விரல்களால் மூடி, வெளிப்பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பிக் கண் விழிகளை நடுவே நிறுத்தி நாத (பிராணன்), பிந்து, (மனம்) களை (புத்தி) என்பனவற்றை ஒன்றாய் சேர்த்தல்.
  6. சாம்பவீ – விழிகளை இமை கொட்டாமல் திறந்து பார்வையை அருள் வெளியான சிதாகாசத்தில் நிறுத்தி அங்குள்ள விந்தை மண்டலங்களைப் பார்த்துச் சொக்கியிருத்தல்.

🍂பஞ்ச சிவ தத்துவங்கள்🍂

  1. சுத்த வித்தை: 2. ஈசுரம்; 3. சாதாக்கியம் ; 4. சக்தி; 5. சிவம். இவை தமிழில் முறையே. 1. தூய நினைவு; 2. தலைமை; 3. அருள் நிலை; 4. அன்னை; 5. அத்தன் என வகுக்கப்பட்டு ஐந்து சிவநிலைய பொருள்கள் என வழங்கப்படுகின்றன.

🌺அட்டமா சித்திகள்.🌹

  1. அணிமா; 2. மகிமா; 3. கரிமா; 4. இலகிமா; 5. பிராப்தி; 6. பிராகாமியம்; 7. ஈசத்துவம்; 8. வசித்துவம் இவை தமிழில் முறையே 1. நுண்மை (அணுத்தன்மை) 2. பருமை; 3. விண்டன்மை 4. மென்மை ; 5. விரும்பிய தெய்தல் 6. நிறைவுண்மை 7. ஆட்சியனாதல்; 8. கவர்ச்சி; என வகுக்கப்பட்டு எண்பெரும் பேறுகள் என வழங்கப்படுகின்றன.

கருத்தப்பாண்டியன் M K
சித்தமருத்துவர்
வாழ்வியல் சித்தர்கள் குலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s