தெளிவு 566

தெளிவு 566 எப்படி ஒரு வளரும் செடி கொடி ஒரு கொழு கொம்பில் கட்டி வைத்து வளர்ப்பரோ ?? அதுக்கு அந்த கொம்பு தேவை வளர்வதுக்கு அப்படித்தான் ஆரம்ப நிலை சாதகம் பழகும் சாதகனும் திருவடி பற்றியும் கண்மணி பற்றியும் சுழுமுனை பற்றியும் சாதகம் பழகுகிறான் இவைகள் தான்  பற்ற வேண்டிய கொம்பு ஆம் இதுகளால் தான் வளர்ச்சி காண முடியும்     வெங்கடேஷ்  

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு குளத்தில் பாசி இது நாம் காணும் சர்வ சாதாரணக்காட்சி இது கோவில் குளத்திலும் ஊர் குளத்திலும் பார்க்கலாம் இது மாதிரி நம் சிரசில் இருக்கும் மூலம் எனும் குளத்திலும் பாசி ஆகிய மாயா மலங்கள் – மும்மலங்கள் மூடி இருக்கு அது ஆன்மாவை மறைத்திருக்கு இயற்கை இந்த இரகசியத்தை இந்த காட்சி மூலம் வெளிப்படுத்துது   வெங்கடேஷ்