தெளிவு 585

தெளிவு 585   மாட்டை பாட்டு பாடி அடக்குவது என்பது சோறு போட்டு முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு அடைவேன் என்பதுக்கு சமம் ஆம் இது பசு நேசர்கள் செய்வது இது சினிமாவில் தான்  நடக்கும் – நிஜத்தில் அல்ல   அதே சமயம் மாடு பிடித்து அதை அடக்குவது என்பது சாதனத்தால் எல்லா சித்தியும் அடைவதுக்கு சமம்   வெங்கடேஷ்  

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி பெற்ற ஆண் குழந்தைகள் திருமணம் ஆன பின்னும் நம்மைப் பிரியாமல் இருந்தால் அது வரம் அதே பெண் குழந்தைகள் திருமணம் ஆகாமல் நம்மை விட்டுப்பிரியாமல் இருந்தால் அது சாபம் ஆம்   வெங்கடேஷ்

 நிதர்சனம்

 நிதர்சனம் சாமானியன் தன் சிறு பிள்ளை பிராய நினைவுகள் வந்தால் இப்படி எல்லாம் நாம் இருந்தோமே என  எண்ணி நகைத்துக்கொள்கிறான் அதே ஞானியும் தான் உலக நடையில் இருந்த நாட்களை எண்ணும் போது இப்படி எல்லாம் நாம் இருந்தோமே என  எண்ணி நகைத்துக்கொள்கிறான் வெங்கடேஷ்  

 “ இதுவும் அதுவும் ஒன்று தான் “

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “   நம் ஜோதிடர்கள் கூறும் பரிகாரமும் தேவாலயத்தில் வழங்கப்படும் பாவமன்னிப்பும் ஒன்று தான் அதனால் ஒரு லாபமுமில்லை பயனுமில்லை அதெல்லாம் வெறும் சடங்கு அவ்ளோ தான்   வெங்கடேஷ்