தெளிவு 329

தெளிவு 329 அன்பு மரியாதை காதல் நம் வாழ்வு – அதில் சௌகரியங்கள் வசதிகள் தவத்தால் வரும் சித்தி இவைகள் எல்லாம் பிச்சையாக பெறக்கூடாது அதுக்கான உழைப்பு கொடுத்து சம்பாதிக்க வேண்டும்   வெங்கடேஷ்

  காக புஜண்டர் ஞானம் 80 – 20

காக புஜண்டர் ஞானம் 80 – 20   இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய் நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும் பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா! கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20   பொருள் : நிர்விகல்ப சமாதி விளக்கம் அளிக்கிறார் சித்தர் தன் அனுபவத்தின் மூலம்   சூக்கும இருதயமாகிய சுழுமுனை…

 காக புஜண்டர் ஞானம் 80 – 19

காக புஜண்டர் ஞானம் 80 – 19   காணாத காட்சியெல்லாங் கண்ணிற் கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன் தோணாமல் நானலைந்து சிறிது காலம் துருவமென்ற பிரமத்தை யடுத்துக்கேட்க நாணாமல் அண்டவுச்சி தன்னி லேதான் நாடியே மனத்தாலே நாட்ட மாகக் கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக் கூசாமல் மனமொன்றா யிருத்தி னேனே   பொருள் :   நான் செய்த  தவத்தால் காணா காட்சியெலாம் கண்டு காக புசுண்டர் என பேர் அடைந்தேன் நானும் சில…

  ஞானியரும் கவிஞரும் ஒப்பீடு

ஞானியரும் கவிஞரும் ஒப்பீடு   கவிஞர் : “ நீல விழிப்பந்தல்  நீ இருக்கும் மேடை  “ என காதலி தன் காதலன் இருப்பிடம் பற்றி பாடுகிறாள்   ஞானியரும் ஆன்ம சாதகரும் : “ கண்மணியில் இருக்கும் தலைவா – நின்னைக்காணவே என்ன தவம் செய்தனன் முன்னம் அருட்பா – 6ம் திருமுறை   ஞானியரும் கவிஞரும் சிந்தை ஒன்றே தான் பின்னவர் பாதி ஞானி தான்   வெங்கடேஷ்  

  ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும்   சாமானியர் தேவையில்லா அனாவசிய செலவு குறைக்கிறான்   ஞானியர் ஆன்ம சாதகர் உலக வாழ்வில் தேவையில்லா செயல் யாவும் நீக்குகிறான் மதிப்புக்கூட்டல் இல்லா செயல் யாவும் நீக்குகிறான் உலக வாழ்வில் ஈடுபாடு குறைக்கிறான்     வெங்கடேஷ்