காக புஜண்டர் ஞானம் 80 – 20
இருத்தியே இருதயத்தில் மனமொன் றாக சுகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்
நிருத்தியே வெகுகோடி கால மட்டும் நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்கப் பூலோக மெங்கு மொன்றாய் நிறைந்தென் மைந்தா!
கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக் காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே. 20
பொருள் :
நிர்விகல்ப சமாதி விளக்கம் அளிக்கிறார் சித்தர் தன் அனுபவத்தின் மூலம்
சூக்கும இருதயமாகிய சுழுமுனை உச்சியில் மனதை இருத்தி ஆன்மாவுடன் கலந்து அனந்த கோடி காலம் நான் வேறு – ஆன்மா வேறு என பேதம் நீங்கி நிர்விகல்ப சமாதியில் இருந்தனன்
அதனால் நெற்றிக்கண் திறந்து – அதனால் அக்கண் கொண்டு பார்க்க – எல்லாம் ஒன்றாய்க்கண்டேனே
எல்லாம் ஒருமையில் பார்த்தேனே – எங்கெங்கும் காணினும் நான் தான் பிரமம் தான் என்ற நிலையில் நான் கண்டேன் அனுபவித்தேன்
இந்த அனுபவம் பெற்று இந்த விளையாட்டை ஆடிடுவாயே
வெங்கடேஷ்