நிதர்சனம்
நிதர்சனம் பேராசிரியர் யார் ?? பேருக்கு ஆசிரியராய் இருப்பவரும் சில பல பேர்க்கு ஆசிரியராய் இருப்பவரும் அல்லர் பெருமைக்கு உரியதாயும் பெரிய ஆசிரியராய் இருப்பவர் தான் அவர் வெங்கடேஷ்
நிதர்சனம் பேராசிரியர் யார் ?? பேருக்கு ஆசிரியராய் இருப்பவரும் சில பல பேர்க்கு ஆசிரியராய் இருப்பவரும் அல்லர் பெருமைக்கு உரியதாயும் பெரிய ஆசிரியராய் இருப்பவர் தான் அவர் வெங்கடேஷ்
இதுவும் அதுவும் ஒன்று தான் தமிழில் அடி – நடு – முடி என்பது தான் சமஸ்கிருதத்தில் பூர்வம் – மத்தியம் – உத்தரம் என பேர் பெறுகிறது ரெண்டும் ஒன்று தான் பிரணவத்தின் திருவடியின் அடி நடு முடி அனுபவங்கள் உள்ளன வெங்கடேஷ்
காக புஜண்டர் ஞானம் 80 – 30 பாரப்பா விஞ்சைமந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா! ஆரப்பா சென்றேறிப் பார்க்கும்போது அதீதமுள்ள விஞ்சைமந்த்ரம் அனந்தங் காட்டும்; நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள் நிமிடத்திற் செய்திடுவாய் நிலையைக் கண்டால் வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும் வேரில்லாக் கனிதனையு முண்க லாமே. 30 பொருள் : விஞ்சை மந்திரம் = இறை அறியும் அறிவு – கலை ஆனால் அதெல்லாம் வீண் விஞ்சை கிரி என…
காக புஜண்டர் ஞானம் 80 – 29 கண்டுகண்டு மனந்தானே அண்டஞ் செல்லக் கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும் தண்டுமுண்டு செய்யாதே மனம்வே றானால் தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய் தொண்டுசெய்து பெரியோரை யடுத்து மைந்தா தொழுதுநீ யென்னூலை யன்பாய்க் கேளு விண்டுமவர் சொலாவிட்டா லிந்நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப் பாரே. பொருள் : உண்மை தவ அனுபவம் பற்றி கூறுகிறார் மனம் வாசியுடன் கலந்து தம்பம் மேலேறும் போது – வீணாகும் கலை…
காக புஜண்டர் ஞானம் 80 – 28 விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலையாகும் விரும்பிப் பாரு மலையாமல் வெண்சாரை பிடித்தே யுண்ணு மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்; அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக் கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு கபடமற்ற தேகமடா கண்டு பாரே. பொருள் : சித்தர் நூலில் சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பது தான் வழக்கு ஆனால் இந்தப்பாடலில் அந்த வழக்கு மாறியுள்ளது…
காக புஜண்டர் ஞானம் 80 – 27 தாமென்ற உலகத்தில் மனித ரோடே சஞ்சாரஞ் செய்யாமற் றனித்து நில்லே ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய் கொண்டவனோ டிணங்கி டாதே காரணத்தைக் கண்டுவிளை யாடு வாயே. பொருள் : ஆன்ம சாதகர் என்ன செய்ய வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என சொல்கிறார் ?? 1 தான்…
தெளிவு 635 இறைக்கு செய்யும் அபிஷேகம் பால் – தயிர் – நெய் – இளநீர் – பஞ்சாமிர்தம் – நீறு இதெல்லாம் அமுதத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் ஆம் பால் = அமுதம் தயிர் – நெய் – பாலிருந்து உண்டாவது அக அனுபவம் தான் புறச் சடங்கு ஆக விளங்குது வெங்கடேஷ்