தெளிவு 636

தெளிவு 636   1 வீர பாண்டி 2 சுந்தர பாண்டியன் 3 வீர பாண்டியன் என்பதெல்லாம் ஆன்மாவைக் குறிக்க வந்த பதங்களாம் அது வீரம் – அழகு நிறைந்த பொருள் ஆகையால் ஊருக்கும் மனிதர்க்கும் இந்த பேர் வைத்துக்கொண்டுள்ளனர்   வெங்கடேஷ்  

  காக புஜண்டர் ஞானம் 80 – 33

காக புஜண்டர் ஞானம் 80 – 33 நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக நலம் போலே சாத்திரங்கள் கட்டி னார்கள்! பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப் பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான் காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே கபடமாய் வாய்ஞானம் பேசு வார்கள்; கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார் கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே.   பொருள் : உலக மாந்தரின் நிதர்சன நிலையை உரைக்கிறார் சித்தர் அதாவது சித்தர் பெரு மக்கள் எல்லாரும் உலக நன்மைக்காக…

 காக புஜண்டர் ஞானம் 80 – 32

காக புஜண்டர் ஞானம் 80 – 32 ஒன்றான பிரமமே வெவ்வே றாக உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு; நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு; குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு; குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே.   பொருள் : இயற்கையின் விரிவு எடுத்துரைக்கின்றார் சித்தர்   ஒன்றான பிரம்மம் ஆகிய ஆன்மாவே உலகில் எல்லாமாகி பல்வேறு வஸ்துவாகி அதன்…

 காக புஜண்டர் ஞானம் 80 – 31

காக புஜண்டர் ஞானம் 80 – 31 உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந் திங்கலாந் தோணுமடா அமர்தச் சீனி தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா! தங்கலாந் தேகமது அறியா மற்றான் சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே.   பொருள் : அமுதம் உண்ணுவதினால் உண்டாகும் அனுபவம் கூறுகிறார் சித்தர்   சுழுமுனையில் அடங்கும் போது அமுதம் உண்ணலாம் அது உச்சியிலிருந்து…

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   முருகன் உதித்த சரவணப்பொய்கையும் அத்தி வரதர் சயனத்திருக்கும் அனந்த சரச் தீர்த்தக்குளமும் ஒன்று தான் அது சிரசின் உச்சியில்  இருக்கும் “ ப“ கரக்குழி – அமுத கலசம் ஆகும்   வெங்கடேஷ்  

  தெளிவு 634

தெளிவு 634   பெண்ணுக்கு கண்ணீர் தான் அயுதம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆனால் ஞானிக்கும் ஆன்ம சாதகர்க்கும் மௌனம் தான் ஆயுதமே அதை கொண்டு எல்லாவற்றையும் சாதித்துக்கொள்கிறான் மலக்கழிவு – ஆன்ம தரிசனம் மரணமிலாப்பெரு வாழ்வு –  ஞான சித்திகள் – முத்தேக சித்தி உட்பட     வெங்கடேஷ்