காதலனும் ஆன்ம சாதகனும்
காதலன் : காதல் தோல்வி விரக்தியில்
மாளிகை ஆவதும் அவளாலே
பின் மண் மேடானதும் அவளாலே
ஆன்ம சாதகன் :
ஆன்மாவை நோக்கி :
நீ என்னுடன் இருந்தால்
நான் உன்னுடன் கலந்தால்
என் வாழ்வு மச்சு வீட்டில் – மாளிகையில்
அதே என்னை விட்டு நீங்கினால்
நான் மனம் பின் ஏகினால்
என் வாழ்வு மண்மேடு தான்
எப்படி இருவரும் ??
இரு துருவம் தானே ??
வெங்கடேஷ்