மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை
உண்மை சம்பவம் –
சென்ற மாதம் நடந்தது
என் உறவினர் என்னை காண கோவை வந்திருந்தார் குடும்பத்துடன்
சில மருந்துகள் வேணும் என்றார்
சரி என நான் சாந்தி கியர்சின் ஜன் ஔஷத் சாலை – பிரதம மந்திரி மலிவு விலை மருந்தகம் சென்று வாங்கி கொடுத்தேன்
அவர் கூறிய ரத்த அழுத்த மருந்தின் விலை
15 = 135 ரூபாய்
நான் 100 ரூபாய்க்கு = 170 – 17 அட்டைகள் வாங்கிக்கொடுத்தேன்
அவர்க்கு சுமார் ரூ 1300 /= மிச்சம்
அவர்க்கு வியப்போ வியப்பு
எப்படி இவ்ளோ குறைந்த விலை என்றார்
அது தான் இந்த அரசு ஏற்பாடு செய்திருக்கும் மருந்து கடை
நான் சென்னை சென்று பார்க்கிறேன் என்றார்
இது அனேகர்க்கு தெரியாது விழிப்புணர்வில்லை
அவர் மனைவி எனக்கு நன்றி செலுத்தும் விதமாக என் மனைவியை ஸ்ரீ தேவி கடைக்கு அழைத்து சென்று ஒரு புடவை வாங்கிக்கொடுத்து தெரிவித்துக்கொண்டார்
அதன் விலை 1500 /= ரூ
என் மனைவிக்கு தாங்க முடியாத அளவுக்கு சந்தோஷம் வியப்பும் தான்
நான் அந்த சேமிப்பை இதன் மூலம் ஈடுகட்டிவிட்டீர்களா ?
இல்லை இல்லை என்றார்
நானும் நகைச்சுவை தான் என்றேன்
மருந்து ஆலைகளின் கொள்ளை எப்படி இருக்கு ??
வெங்கடேஷ்