ஞானிகள் உலக ஒற்றுமை

ஞானிகள் உலக ஒற்றுமை   மேலை ஞானிகள் : BE THERE FOR OTHERS – BUT NEVER LEAVE YRSELF BEHIND FOR THEM அதாவது உங்கள் உயிர் பணயம் வைத்து பிறர்க்கு உயிர்க்கு உபகாரம் செய்தல் அனாவசியம்   இதை தான் நம் வள்ளல் பெருமானும் – ஜீவகாருண்ணியம் என்கிறார் தனக்கு பிறகு தான் மற்றதெல்லாம்   ஆனால் நம் மக்கள் என்ன செய்கின்றார் ?? அதுக்கு நேர் எதிராக ??   வெங்கடேஷ்

 நிதர்சனம்

நிதர்சனம்   விவரமில்லாதார் சேர்வது மனவளக்கலை – வாழும் கலை – ஈஷா   விவரம் அறிந்தோர் சேர்வது கிரியா – சாலை – வாசி – சன்மார்க்க கண் தவம்   வெங்கடேஷ்  

 அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை

அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம்     1. அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம் அனைத்தும்அவை ஆக்கல்முதலாம் பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப் புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல் பூரணா காரமாகித் தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித் திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை தெளிந்திட வயங்குசுடரே சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே சுத்தசிவ…

 அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை

அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே என்இயற் குணம்அதனிலே இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே என்அனு பவந்தன்னிலே தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும் தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பிநிறை கின்றஅமுதே துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே…

 ஹரித்துவார் – பெயர் உண்மை விளக்கம்

ஹரித்துவார் – பெயர் உண்மை விளக்கம்   இந்த ஊர் இடம் இமயமலையில் இருக்கு இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ??   ஹரித்துவார் = ஹரி + துவார் ஹரி = ஆன்மா துவார் = அதை அடைய வழி காட்டும் துளை அதாவது இது சுழுமுனை வாசல் குறிக்குது அகத்தில் இது திறந்தால் ஆன்ம தரிசனம் கிட்டும்   வெங்கடேஷ்