தெளிவு 701

தெளிவு 701   கருக்கொளும் குழியும் கருக்கொளாக் குழியும்   உடல் சேர்க்கையில் விந்து கீழிறங்கினால் அது சேர்வது கருக்கொளும் குழி அதுவே  மேலேறினால் அது சேர்வது கருக்கொளாக் குழி   கருக்கொளாக்குழி சேர்ந்துவிட்ட ஒருவனுக்கு மீண்டும் கரு புகும் காரியமில்லை   வெங்கடேஷ்  

 தெளிவு 700

தெளிவு 700   உடலில் ஈரம்  இருந்தால் தான் தடவும் Moisturising cream கிரீம் ஒட்டுமா போல்   நெஞ்சில் ஈரம் இருந்தால் தான் ஈசன் அருள்  நம்மில் ஒட்டும்   வெங்கடேஷ்  

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   தெளிவு அடைந்த பின் ஒரு பிறவியில் முத்தேக சித்தி புருஷார்த்தத்துக்கு ஆசைப்படுவது என்பது ஒரு முதிர்ந்த புற்று நோயாளி ஒரு சுற்று கீமோவில் குணமடையும் என எதிர்ப்பார்ப்பது மாதிரி   ரெண்டுமே நடக்காத ஒன்று   வெங்கடேஷ்  

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி   எதிர்ப்பாராதது நடப்பது வாழ்க்கையில் – அரசியலில் போட்டி பந்தயத்தில் – கிரிக்கெட்டில் மட்டுமல்ல திருமணத்தின் போதும் தான்   வெங்கடேஷ்  

பில் கேட்சும் நானும் – Bill Gates MicroSoft

பில் கேட்சும் நானும் – Bill Gates MicroSoft   எப்படி ஒரு கணினி விற்றவுடன் Bill Gatesக்கு அதன் ராயல்டி தொகை சேருதோ  ?? அவ்வாறே தான் என் பதிவுகள் மூலம் ஒருவர் தெளிவு அடைந்தாலோ சாதனமும் பயின்று அனுபவமும் பெற்றாலோ அதனால் எனக்கு புண்ணியம் சேர்ந்து கொண்டே போகும்   “ ஆயிரம் அன்னதான சத்திரங்களைக் கட்டுவதைக்காட்டிலும் மேல் ஆங்கோர் ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் “   எழுத்து அறிவித்தல் = ஞானம் அளித்தல்…

 அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும்   அக்காலத்தில் தினம் காலை 6.45 -7.00 செய்திகள் வானொலியில் சரோஜ் நாராயணசாமி –  ஹேமா சத்யமூர்த்தி குரலில் மகிழ்ந்தோம் மாலை 7.00 – 7.30 தொலைக்காட்சியில் செய்தி கேட்டோம் ஷோபனா ரவி – தமிழன்பன் – ஃபாத்திமா பாபு வாசிப்பு பிடித்தது   இக்காலத்தில் 24*7 செய்திகள் – என் நேரமும் செய்திகள் தான் பிரேக்கிங்கு நியூச் என மக்களை சாவடிக்கிறார்   அக்காலத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காக தவம் செய்தோம்…