சன்மார்க்கமும் சமயமதங்களும் 5

சன்மார்க்கமும் சமயமதங்களும் 5

இந்த பதிவு நீண்ட நாளாக எழுத எண்ணியது இப்போது தான் நடக்குது

2015 ல் இதன் முந்தைய பாகங்கள் வந்தது

இதில் எப்படி சமயமதங்கள் சன்மார்க்கத்துடன் வேறுபட்டு நிற்கிறதென பார்க்கலாம்

1  முத்தி

சமயம்  : இது தான் இறுதி முடிவு என நினைக்குது

சன்மார்க்கம் : இது முதல்படி என முடிவு செய்துவிட்டது

 

2 குண்டலினி :

சமயமதம் : முதுகுத்தண்டின் அடியில் இருக்கு

மேலேற்ற வேணும் என கருதுது – பயிற்சியும் அளிக்குது

சன்மார்க்கம் : சிரசில் இருக்கு

மேலேற்ற அவசியமில்லை

சாலனா தந்திரத்தால் அசைப்பிக்கலாம் என கற்றுத்தருது

3  சமய மதம் மார்க்கங்கள் எல்லாம் தத்தம் அனுபவம் தான் இறுதி என முடிவு செய்து அதுக்கேற்றவாறு கர்த்தாக்கள் தெய்வங்களை கற்பிதம் செய்துவிட்டார்கள்

சன்மார்க்கம் : இதெல்லாம் தாண்டி – இந்த அனுபவத்தை எல்லாம் தன்னுள் அடக்கி  அதன் மேல் நின்று விளங்குது

சமய மதம் – 10 , +2 , பட்டம் – மேற்படிப்பு என நிற்க – சன்மார்க்கம் மட்டும் முனைவர் பட்டம் Ph D  வரையில் நிற்குது என்பது உண்மை

இது தான் சன்மார்க்கத்தின் தனிச்சிறப்பு

 

4 மரணம்

சமயம் ; இதன் பின் உயிர் வைகுண்டம் – கைலாயம் அடையும் என நம்பியது – இப்பவும் நம்புது –  இது பொய்

சன்மார்க்கம் : மரணம் அடைந்தால் அந்த உயிர் மீட்டும் பிறப்பு எடுத்து – எடுத்து வினை தீரும் வரை இருந்து – தீர்த்து – பரத்துடன் கலக்கும்

5 சமாதி

சமயம் : இது மிகப்பெரிய  நிலை என எண்ணியது – எண்ணுது

எல்லா சித்த புருஷர்களும் இந்த நிலை தான் அடைந்துள்ளனர்

சன்மார்க்கம் :

இந்த ஒளி நெறி தான் சமாதி கூட மீண்டும் பிறப்பு கொடுக்க வல்லது

இது கூட ஒரு நிலை தான்

இதுக்கு மேலும் ஒளி தேக அனுபவம் உள்ளது என காட்டியது

 

6 தேக பாதுகாப்பு

சமயம் ; உடலை மதித்ததே இல்லை

அவர் எல்லாரும் உடலை திறந்தே வைத்திருந்தார்

உ ம் ரமணர் – ராமகிருஷ்ணர்

சன்மார்க்கம் :

உடலை பொன் போல் பாதுகாப்பது ஆம்

உடலை போர்த்தியே வைத்திருப்பார் வள்ளல் பெருமான்

மேற்கூறிய காரணங்களாலும் வள்ளல் பெருமான் சமயமதங்கள் எல்லாம் பொய் – புகுதாதீர் என கூறியிருக்கக்கூடும்

ஆனால் அதிலும் உண்மைகள் உள்ளன

ஆக சமயமதம் உண்மை பொய் கலந்த ஒரு கலவை

எது உண்மை எது பொய் என ஆய்ந்து நாம் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்

அதன் படி நாம் அனுஷ்டித்து பயன் பெற வேண்டும்

அது சாதகனின் கடமையும் தர்மமும் ஆம்

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s