பிரபஞ்ச பேராற்றல் 10
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
முன்னாள் தபசிகள்
மலை உச்சியில் ஒரு காலில் நின்றபடி
இரு கை மேல் குவித்து இதை ஆற்றுவர்
இது ஏனெனில்
இவ்வாறு செய்தால்
பிரபஞ்ச ஆற்றலை கிரகிக்க முடியும் என்பது தான்
இது புறம்
அகத்தில்
ஒரு கால் என்பது
சுழுமுனை சுவாசம் இயக்கத்தை குறிப்பதாம்
இரு கை குவிப்பு என்பது
பார்வை மனம் பிராணன் அசையாமல்
உச்சியில் வைத்து நிற்றல் ஆம்
இவ்வாறு தவம் ஆற்றில்
பிரபஞ்ச ஆற்றல் கிரகிப்பது உறுதி ஆம்
வெங்கடேஷ்