அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் ஒருவர் அலைபேசியில் : உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன ?? நான் : நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை பல்லாயிரம் ரூபாய் வீண் தான் அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் ?? என்றேன் இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன் அவர் சிரித்தார் நான் : வேணுமானால்…

திருமந்திரம் –  8 ம் தந்திரம்

திருமந்திரம் –  8 ம் தந்திரம்   படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான் வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை  வோரும் துடியில்லம் பற்றி துயின்றனர் தாமே     பொருள் :   ஜீவன் ஆகிய  மன்னவன் வாசி குதிரை ஏறி , சுழுமுனை  உச்சி அடைந்த போது – ஐந்தொழில் செய் தலைவரும் பிரமன் விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் சதாசிவன் யாவரும்  ஜீவனை விட்டு கழன்றனர் எங்கிறார் மூலர்  …

உணவு முக்கியம்

உணவு முக்கியம் நம் உடல் மண் போல் மக்கி போகவேணுமெனில் மண் விளை உணவு உண்ணலாம் அதிகமாக தற்போதைய நம் நிலை போல ஒளி தேகமும் என்றும் அழியா ஞான தேகம் வேணுமெனில் அக்கினி கூறும் ஆகாயக் கூறும் அதிகமிருக்கும் உணவு உண்ண வேண்டும் அக்கினியும் ஆகாயமும் உடலை காயகல்பம் செயும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்

Strange relationship

Strange relationship Between words Listen n Silent If you jumble Listen You get Silent If you listen to Music Sound Mind becomes Silent If you Listen to Sacred sound Natham You become Silent Mind being subjugated You merge with Silence BG Badhey Venkatesh

” சிதாகாயம் –  சன்மார்க்க விளக்கம் “

” சிதாகாயம் –  சன்மார்க்க விளக்கம் ” அறிவு ஆகிய விந்துவானது சித்து வடிவாக தேகத்திலிருக்கும் ஆகாயத்தில் வந்து நிற்பதால் அவ்வாறு பேர் பெற்றது வெங்கடேஷ்

மனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள்

மனிதரின் பரிணாம வளர்ச்சிப் படிகள் அன்னம் பிரம்மம் இது நம் முன்னோர் அமுத மொழி இதை கொண்டு உணவே தெய்வம் என வாழ்வது சாமானியர் தெய்வமே உணவு பிரம்மமே அன்னம் இது ஞானியர் தம் நிலை இந்த உயரிய நிலை அடைவது மனிதர் பரிணாம வளர்ச்சிப் படிகளாம் வெங்கடேஷ்

மனிதனின் பரிணாம வளர்ச்சிப் படிகள்

மனிதனின் பரிணாம வளர்ச்சிப் படிகள் ஆரம்ப நிலையில் மண் விளை உணவு வகைகள் குறைத்து தெய்வ அம்சம் நிறை உணவுகள் உண்டும் பின் அதுவும் விடுத்து தெய்வத்தையே உணவாக கொளும் நிலைக்கு உயருதல் ஆன்ம சாதகனின் பரிணாம வளர்ச்சிப் படிகளாம் ஊண் உறக்கம் இன்மை ரெண்டும் ஞானியர் தம் இலக்கணம் வெங்கடேஷ்

வருத்தமும் வேதனையும்

வருத்தமும் வேதனையும் நம் மக்கள் நின்றால் உட்கார்ந்தால் அபெஜோதீ அபெஜோதி என்கிறார் ஒளியைப் போற்றுகிறார் கொண்டாடுகிறார் வணங்குகிறார் ஏத்துகிறார் வருத்தமும் வேதனையும் என்னவெனில் ஒளிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஒளியை முன்னிறுத்தும் கண் உறுப்பை பொருட்டாக மதிப்பதே இலை கண்டு கொள்வதே இலை அதனால் சன்மார்க்கம் உண்மையில் வளரவிலை ஆனால் மக்கள் மத்தியில் பரவியுளது வெங்கடேஷ்

கண்மணி பெருமை

கண்மணி பெருமை மனம் நினைப்பை ஒழிப்பதுக்கும் அதன் அசைவை ஒழிப்பதுக்கும் முக்கிய மற்றும் முழு முதற் காரணம் கண்ணே ஆம் திருவடியால் சித்தி ஆகா காரியம் எதுவுமில் அதே போல் அனுமானாலும் எல்லாம் ஜெயமே வெங்கடேஷ்