“ ஆன்ம நேய ஒருமைப்பாடு “ – விளக்கம்
இதை சுலபமாக புரிய வைக்கவா ??
ஓருரு ரெட்டையர் உணர்வு மாதிரி தான் இந்த ஆன்ம நேய ஒருமைப்பாடு ஆம்
அவர்களில் ஒருவனுக்கு காய்ச்சல் தலைவலி கண்டால் – அது மத்தவனுக்கும் வரும்
இருவரும் பிரிய மனம் ஒப்பார்
அந்தளவுக்கு இருவரும் உடலாலும் மனதாலும் பின்னி பிணைந்து இருக்க விரும்புவர்
இந்த நிலையைத் தான் வள்ளல் பெருமான் தன் பாடலில் :
1 நான் பசித்த போதெலாம்
தான் பசித்ததாகி
தான் = ஆன்மா
2 மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமுறை
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ
ஈதெல்லாம் தான் பிரமாணங்கள்
வெங்கடேஷ்