கண்மணி –   திருவடி பெருமை

கண்மணி –   திருவடி பெருமை   சிவத்தின் சிற்றம்பல நடம் நின்றால் உலக இயக்கம்   நின்றுவிடும்   கண்மணிகள் நடனம் ஆட்டம் நின்றால் மனதின் இயக்கம் ஆட்டம்  நின்றுடும்   இது கண்மணி பெருமை   வெங்கடேஷ்

திருவடி பெருமை

திருவடி பெருமை   உலகம் இரும்புக்கரம் கொண்டு கலவரம் போராட்டத்தை அடக்குது ஆனால் ஆன்ம சாதகனோ மென் மலர்ப்பாதம் கொண்டு கலவரம் – போராட்டம் செயும் மனதை அடக்கிவிடுகிறான்   எப்படி இருக்கு ??   வெங்கடேஷ்  

கண்மணி பெருமை

கண்மணி பெருமை   ஒரு பெண் காதல் அம்பு தொடுத்தால் காதலன் இதயம் துளைத்து இரத்தம் கசியுது வழியுது   ஆன்ம சாதகன் பார்வை அம்பு  இதயத்துக்கு தொடுத்தால் அது பிளந்து அமுத கலசம் உடைந்து அமுதம் வழியுது   இது எப்படி இருக்கு   ?   வெங்கடேஷ்

அருள்  பெருமை

அருள்  பெருமை   குரு : தான் நின்ற வண்ணம் தம் மாணாக்கரை அறிவில் சாதனையில்  அனுபவத்தில் உயர்த்தி நிற்க வைப்பவர்   இதையே தான் அருளும்  பிரபஞ்சமும் செய்யுது தான்  எண்ணியதை – கற்றுக்கொடுக்க எண்ணிய பாடத்தை அது நமக்கு புரிய வைக்குது அதுக்கு தேவையானவற்றை எலாம் செயுது புரிய வைத்த பின் சாதனத்தில் மேன்மேலும் வளர்க்குது அனுபவம் கூட வைக்குது இதுக்கு பல ஆண்டுகள் கூட ஆகலாம் இது அருள் பெருமை ஆம்  …

கண்மணி பெருமை

கண்மணி பெருமை   காற்றின் இருப்பு பொருளின் அசைவால்  அறிந்து கொள்வது போல்   மனதின் இருப்பை கண்களின் அசைவால் அறிந்து கொள்ளமுடியும்   கண் அசைவு ஒழிந்தால் மனதின் அசைவு ஒழியும் மனமும் ஒழியும்     வெங்கடேஷ்  

நெற்றிக்கண் பெருமை

நெற்றிக்கண் பெருமை   புருவத்தின் கீழ்  இருக்கும் விழிகள் மூடும் திறக்கும்   ஆனால் நெற்றியில் விளங்கும் தீப விழி மூடவே மூடாது   வெங்கடேஷ்  

விழிப்புணர்வு பெருமை

விழிப்புணர்வு பெருமை   சாதனம் தவத்தில் அடையும் உயர் அனுபவங்கள் தக்க வைக்க விழிப்புணர்வு மிக மிக அவசியம் இதிருந்தால் தான் அந்த உயர் அனுபவ  நிலையிலேயே நிலைத்து நிற்க முடியும் இலையெனில் சறுக்கி விடுவோம்     வெங்கடேஷ்  

உளவின் பெருமை

உளவின் பெருமை     உழவு இருந்தால் தான் நமக்கு உணவு – ஜீவனம் வாழ்க்கை எல்லாம் இது புறம்   அதே போல் தான் உளவு இருந்தால் தான்   சாதனத்தில் தவத்தில் வளர்ச்சி முத்தி சித்தி முத்தேக சித்தி  மரணமிலாப்பெரு வாழ்வு எலாம்   நம் மக்கள் ரெண்டாவதை காற்றில் பறக்க விட்டார்   வெங்கடேஷ்  

 கண்மணி பெருமை

கண்மணி பெருமை   கதை : குகையில் இருக்கும் கிளி கொன்றால் ராட்சஷன் மாண்டு போவான்   அனுபவம் : குகையில் கண் ஏற்றி அசைவை –  நுண்ணிய – மிக மிக நுண்ணிய அசைவை ஒழித்தால் மனம் மாண்டு போம் அக அனுபவம் தான் புறக்கதை     வெங்கடேஷ்