அருட்பெரு ஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
அருட்பெரு ஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும் அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி 20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 19 போதத்தின் ( அறிவு ) அந்தமாகிய பெரிய உண்மை பொருள் விளங்கும் சிற்சபை ஆகிய சுத்த சிவ பர வெளி 20 நாதத்தின் இறுதியும் முடிவும் விளங்கும் பெரிய வெளி ஆகிய அடைதறகரியதாகிய சிற்சபை எனும் வெளி வெங்கடேஷ்