இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் ஜீவபிரம்மம் என்பதும் ஜீவான்மா என்பதும் ஒன்று தான் பிரமத்துவாரம் – பிரமரந்திரம் என்பதில் பிரமம் என்பது ஆன்மா தான் குறிக்குது அது திறந்தால் நாம் தரிசனம் செய்வது ஆன்மாவே அன்றி சிவமிலை ஆகையால் ஜீவன் என்பது நம் தற்போதைய நிலை ஆன்மா என்பது நாம் கலக்கும் பரம் பொருள் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு தோல் முக்கியமா ?? இலை பழம் முக்கியமா ?? என வினவுவது ஒக்கும் சரியை கிரியையா ஞானமா ?? என வினவுவது வெங்கடேஷ்

நிதர்சனம்

நிதர்சனம் சாமானியர் ஆண் பெண் கூடல் நீடிக்க ஆசைப்படுகிறார் முடியவே கூடாது என எண்ணம் ஆன்ம சாதகரோ மனம் அற்ற நிலை தரும் இன்பம் நீடித்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறார் ரெண்டுக்கும் பலம் வேணும் முதலாவதுக்கு உடல் பலம் ரெண்டாவதுக்கு மனோ பலம் வேணும் விழிப்புணர்வும் அவசியம் வெங்கடேஷ்

சைவமும் அசைவமும் 

சைவமும் அசைவமும்   உள்ளத்தின் உணர்வு சைவம். மனதின் உணர்ச்சி அசைவம். மனதின் அமைதிநிலை சைவம். அமைதியற்ற நிலை அசைவம். நான் இந்த உடல்தான் என்ற எண்ணம் அசைவம். உடல் அல்ல ஆன்மா என்றிருப்பது சைவம். எல்லாம்வல்ல இறைவனுக்குள் எல்லாம் அடக்கம் என்று உணர்வது சைவம். எனக்குள் இறைவன் அடக்கம் என்று நான் கடவுள் என்று கர்வப்படுவது அசைவம்   வெங்கடேஷ்