மூளையும் பேட்டரியும்

மூளையும் பேட்டரியும் எச்சரிக்கை எங்கள் அப்பார்ட்மெண்டில் நிறைய கார்களில் பேட்டரி செத்துவிட்டது – ரெண்டு மாதம் எடுக்காததால் – பயன்படுத்தாததால் நம் மூளையும் இப்படித்தான் போலும் வெங்கடேஷ்

தெளிவு

தெளிவு நிழலின் அருமை கோடையில் தெரியும் UPS அருமை மின்சாரமிலா இரவில் தெரியும்   வெங்கடேஷ்

நிதர்சனம்  

நிதர்சனம்   பெருந்தொற்று 70 வயது முதியவரையும் சிறு பிள்ளை ஆக்கிவிடுது கஷாயம் குடித்த பின் சர்க்கரை சாப்பிட வேண்டியிருக்கு   வெங்கடேஷ்

சிற்சபை – சீர்காழி – பெருமை

சிற்சபை – சீர்காழி – பெருமை   எப்படி சிற்சபை அழியாதோ ?? அவ்வாறே தான் சீர்காழியும் அழியாது ஏனெனில் ?? அங்கு தான்  சம்பந்தர் அவதரித்துள்ளார் அவர் வேகாக்காலின் அம்சமாகையால் அவர் தான் நம்மை சிற்றம்பலம் சேர்க்கப்போவதால் அவர் அவதரித்த ஊரும் அழியாத்தன்மை உடைத்து   வெங்கடேஷ்    

உலகமும் ஞானமும்

உலகமும் ஞானமும் உலக பொருட்கள் கொண்டு நம்மை நிரப்பினாலும் நாம் நிறை  அடைய மாட்டோம் ஏதோ ஒரு குறை இருந்தபடியே இருக்கும்   அதே சிவத்தால் நிரப்பினால் நாம்  நிறை அடைந்து விடுவோம்   முன்னது ஜடம் பின்னது அறிவு உண்மை ஆனந்தம்   வெங்கடேஷ்