மழையும் அமுதமும்
மழை பொழிந்தால்
பூமி குளிர்ந்து போம்
மக்கள் உடல் மனம் குளிர்ந்து கிளர்ச்சி அடையும்
அதே போல் தான்
அமுதம் உடல் முழுதும் பரவினால்
உடலும் மனமும் குளிர்ந்து கிளர்ச்சி அடையும்
பசி எனும் வெம்மை நீங்கும்
மழை பொழிந்தால்
ஊர் தெருக்கள் எலாம் சுத்தம் ஆகும்
நதியில் கலக்கும் சாயக்கழிவுகள் எலாம் கழிந்து
கடலில் சென்று கலந்துவிடும்
அமுதம் பொழிந்தால்
உடலில் இருக்கும் கழிவுகள் எலாம் நீங்கி
மலம் ஜலம் வியர்வை அழுக்கு அசுத்தம் நீங்கி
தேகம் சுத்தம் ஆகிப்போம்
வள்ளல் : போகாப்புனலால் சுத்த உடம்பினராம்
மழை புற அமுதம் ஆம்
வெங்கடேஷ்