கொரோனா பெருமை 

கொரோனா பெருமை இதுதான் விதியின் சதியோ ! காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம். சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது. மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது. நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது. சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது. ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர…

தெளிவு

தெளிவு   மந்தாகினி நதி இது கங்கை நதியின் பல பேர்களில் ஒன்றாம் ஏன் ?? அமுதம் தான் கங்கையாக உருவகம் செயப்பட்டுள்ளது அமுதம் மிக மிக மந்தமாக உடலில் பரவி பணி செய்வதாலும் , இது ஊறுவதும்  மந்தமாக சொட்டு சொட்டாக உருவாவதால் , இந்த நதிக்கு மந்தாகினி என பேர் வைக்கப்பட்டுள்ளது   வெங்கடேஷ்

தவம் எப்படி செயணும் ??

தவம் எப்படி செயணும் ?? வங்கி –  ரெக்கரிங்கு  டிபாசிட் மாதிரி பணம் சேமித்துக் கொண்டே வரணும் பின்னர் பல காலம் கழித்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும் அது மாதிரி தவம் செய்து கொண்டே வரணும் ஒரு காலத்தில் எல்லாம் முதிர்ந்து நல்ல மிக நல்ல அனுபவம் சித்திக்கும்   வெங்கடேஷ்

ஆன்ம சாதகர்கள் வகைகள்

ஆன்ம சாதகர்கள் வகைகள் முதல் தரம் : கற்பூர வகை கூறியவுடன் புரிந்து கொள்வர்   ரெண்டாவது : கரிக்கட்டை மாதிரி சில பல  தடவைகள் கூறி புரிய வைக்க வேணும்   மூன்றாவது : வாழை மட்டை எத்தனை முறை கூறினாலும் பத்திக்கவே பத்திக்காது   வெங்கடேஷ்  

அக்காலமும் இக்காலமும்

அக்காலமும் இக்காலமும்   அக்காலம் : இக்கரை  கடந்திடில் அக்கரை இருப்பது சிதம்பர சர்க்கரை   இக்காலம் : இக்கரை  கடந்திடில் அக்கரை இருப்பது  மதுக்கரை மதுக்கரை = அமுதகலசம் – ஆன்ம நிலை   வெங்கடேஷ்